பொதுவாக ஒரு படத்தை எடுக்க ஏதாவது ஒரு விஷயத்தை தேடிக்கொண்டிருப்போம் ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் இயக்கிய முதல் மூன்று படங்களுமே ஒருவனின் இறப்பு பற்றியே சார்ந்து உள்ளது என்பதையும் அந்த இறப்புக்குள் இரண்டு அல்லது மூன்று கதைகளையும் தெளிவாக அனைவரும் புரிந்துகொல்லும்படியாக திரைக்கதை அமைத்து படத்தை காட்சிபடுதியிருக்கிறார் என்பதை படம் பார்த்த அனைவரும் மறுக்க முடியாத ஒன்று. உங்களுக்காக அவருடைய மூன்று படங்களும் கிழே .....
1) Amores Perros
2) 21 Grams
3) Babel
இந்த மூன்று படங்களையும் நீங்கள் பார்பீர்களானால் புரிந்து கொள்ளவீர்கள், ஒரு மனிதனுடைய இறப்பைப் பற்றியே சார்ந்துள்ளது என்பதை....
படத்தைப் பற்றி ...
படத்தின் கதையை பற்றி சொல்லவேண்டுமானால் சுலபமாக சொல்லி விடலாம் ஒருவனின் இதயம் பாதிக்கப் பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது அதே நேரம் மருத்துவமனையில் வேறொருவன் விபத்துக்குள்ளாகி அங்கே கொண்டுவரப்படுகிறான். அப்போது அவன் இறந்து விடுகிறான். அவனுடைய இதயம் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் இவனுக்கு பொருத்தப்பட்டு காப்பாற்றப்படுகிறது. ஆனால் இன்னொரு கதையும் படத்தில் உள்ளது அதை நீங்கள் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக இங்கே நான் அதை குறிப்பிட விரும்பவில்லை. அதான் படத்தின் மிகவும் சுவாரசியாமான ஒரு விசயமாகும். நீங்கள் நினைப்பது போல் படம் பார்த்தால் சுலமாக புரிந்து கொள்ள முடியும் என்று மட்டும் கனவில் கூட நினைக்க வேண்டாம். ஏனெனில் அதுமாதியான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒருவன் தவறு செய்துவிட்டால் அவன் மரணத்தை தேடித்தான் போகவேண்டுமா எனபதைதான் இயக்குனர் படங்களின் மூலம் முன் வைக்கிறார். படத்தில் ஹீரோவாக வரும் கதாபாத்திரம் இதற்க்கு முன்னாடியே என் பதிவில் வந்திருக்கிறார் என்பதையும் அது ஐ ஆம் சாம் என்ற படத்தின் ஹீரோவும் ஆகும். அந்தப் படத்தில் மனநிலை முதிர்ச்சியடையாத ஒரு குழந்தை போல நடித்திருப்பார். இந்த மாதிரி படங்கள் நம் தமிழ் சினிமாவில் எப்போது பார்க்கப்போகிறோம் என்பதை மக்கள் கேட்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரு விஷத்தை சொல்ல விரும்புகிறேன்
"ஒரு படம் பாமரனுக்கு பிடித்த மாதிரியும்
படித்தவனை யோசிக்க வைக்க கூடியதாகவும் இருக்க வேண்டும் "
என்பதுதான்....... நன்றி நண்பர்களே ...
படத்தை பற்றி ஒரு சின்ன பாடல் வரியை பாடுகிறேன் உங்களுக்காக ...
"இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த சினிமாவிலே
அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாட்டிலே
நல்ல படங்களை ஆதரிக்க மக்கள் உண்டு ஆனால்
அதை எடுப்பதற்குத்தான் ஆளில்லை சினிமாவிலே"
என்னால் முடிந்த எனக்குத் தெரிந்த ஒரு சிறிய பாடல் வரியை நான் இங்கே சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்....
படத்தை பற்றி .....
படம் தொடங்கும் போது காமெடியுடன் தான் தொடங்குகிறது. ஆரம்பமே சிரிப்பு என்றால் படம் நல்லா இருக்குமே என்று ஆவலோடு பார்க்க ஆரம்பித்தேன். கமெர்சியல் மாஸ் மசாலாவை நம்பின ஹீரோக்கள் அனைவரும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கப் போய்விட்ட நேரத்தில் தனுஷ் மட்டும் ஏன் இன்னமும் இந்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுக்கிறார் என்று புரியவில்லை.
தனுஷ் அவர்களே உங்களுடைய நடிப்பு ஆடுகளம் மற்றும் பொல்லாதவனில் நன்றாக வெளிப்பட்டிருந்தது. நான் கமெர்சியல் மாஸ் படங்களை தப்பு சொல்லவில்லை. அதே சமயம் வெறுக்கிரவனும் இல்லை. எந்த மாதிரியான நல்ல படங்கள் வந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும் போது எரிச்சல் தான் வருகிறது. நிறைய ப்ளாஷ் பாக் காட்சிகள் மற்றும் மனீஷாவிற்கு மகனாக வரும் ஒரு கதாபாத்திரம், அவனுடைய தாய் மனீஷாதான் என்று மக்கள் புரிந்து கொள்வதற்காவது இருவருக்கும் இடையே ஏதாவது ஒரு பேச்சு வைத்திருக்கலாம். படத்தில் ஹீரோயினுக்கும் வேலை இல்லை என்பதை படம் நீங்கள் பார்த்தால் தெளிவாக புரிந்து கொள்ளவீர்கள்.
மாப்பிள்ளை --- தகுதியை இழந்து விட்டது...
இந்தப் படம் பல பட விழாக்களில் பரிந்துரை செய்யப்பட்டு சிலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறது. எனினும் படம் பார்க்கும் போது ஒரு நல்ல அனுபவத்தை நம்மால் உணர முடியும் என்பதை படம் பார்த்த யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.
படம் பார்க்கும் போது குழந்தையை வளர்க்க வேண்டிய தந்தை குழந்தை போல நடந்து கொள்ளவது மற்றும் சற்று வளர்ச்சியடையாத பருவத்திலே இருப்பது போலத்தான் கதை அமைக்கப்படிருக்கிறது. படத்தில் வரும் தந்தை மிக மிக நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் திரைக்கதையை மெதுவாகத்தான் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் என்றாலும் படம் பார்ப்பதற்கு நன்றாகத்தான் உள்ளது நண்பர்களே. எனக்குத் தெரிந்து இந்தப் படத்தின் கதை மற்றும் கதாப்பாதிரங்களை தான் நம் தமிழ் சினிமாவில் எ. எல். விஜய் என்ற இயக்குனர் சியான் விக்ரம் அவர்களை வைத்து தெய்வத் திருமகன் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் என்பதால் படத்தின் கதையை நான் இங்கே சொல்ல விரும்பவில்லை காரணம் தமிழ் படத்தின் வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக...
நம் தமிழ் சினிமாவில் உலகநாயகர்களை போல நடிப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள் ஆனால் பார்க்கும் போது நல்ல கதைகளை சொல்வதற்கு இங்கே இயக்குனர்கள் தான் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. சில இயக்குனர்களை தவிர, பாலா மற்றும் அமீர் மற்றும் சிலர் ..... இப்படியே தமிழ் சினிமா போய்க்கொண்டிருக்குமானால் எந்தத் தலைமுறையிலும் உலக சினிமாவிற்கு சரிசமமாக பட விழாக்களில் பங்கேற்க முடியாது என்பதுதான் உண்மை. இதை அணைத்து இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு விஷத்தை நான் இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன். விஜய் டிவி யில் வரும் குழந்தைகளுக்கான நல்ல கதையை படமாக்கும் போட்டி. அதில் போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகள் தான் இயக்குனர்கள் என்னத்த சொல்ல, ஏனெனில் குழந்தைகளுக்கு படத்தை இயக்குவது பற்றி ஒன்றுமே தெரியாது. விஜய் டிவி நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து சினிமாவை கேவலப்படுத்தாதீர்கள் என்பதுதான். இதைப் பற்றி விஜய் டிவி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள் நண்பர்களே....
சியான் விக்ரம் நடிக்கும் படம் வெளிவந்த பின்னால் இரண்டு படங்களையும் சேர்த்து ஒரு பதிவில் எழுதுகிறேன். நன்றி நண்பர்களே ....
காவலன் விஜயின் 51 வது படமாகும். இதுதான் விஜயின் அடுத்த பயணத்திற்கான தொடக்கம் என்று சொல்லவதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் மற்றும் நடிக்க இருக்கும் படங்களின் வரிசையை பார்த்தால் நீங்களும் புரிந்து கொள்வீர்கள். வரிசை உங்களுக்காக
வேலாயுதம் --- ஜெயம் ராஜா
நண்பன் --- ஷங்கர்
பகலவன் --- சீமான்
பொன்னியின் செல்வன் --- மணிரத்னம்
கண்ணபிரான் --- அமீர்
மற்றும் யாவரும் நலம் படத்தின் இயக்குனர் விக்ரம் குமார், களவானி படத்தின் இயக்குனர் சற்குணம் ஆகிய இருவரின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
இவற்றை எல்லாம் பார்க்கும் போது தனது அடுத்த பயணத்தில் இளையதளபதி நன்றாக பயணம் செய்வார் என்றுதான் அவருடைய ரசிகர்கள் எதிர்பாத்து காத்துகொண்டிருக்கிறார்கள்.
காவலன் படம் சில நண்பர்கள் பார்த்து விட்டு படம் சரியில்லை என்று சொன்னார்கள், அதை என்னால் ஏற்றிக்கொள்ள முடியாது, ஏனெனில் ஒரு படத்தை பார்க்கும் போது அதுவும் மாஸ் ஹீரோவான விஜய் படங்களை பார்க்கும் போது அவர் எவ்வாறு நடித்திருக்கிறார் மற்றும் எந்தவிதமான ரோலில் நடித்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டுமே தவிர, முந்தய விஜய் படங்களை மனதிற்குள் கொண்டுவரக் கூடாது. படம் பார்க்கும் போது ஒரு நல்ல காதலின் உணர்வைக் கொடுக்கும் என்பதுதான் உண்மை. என்னடா இவ்வளவு நாள் கழித்து படத்திற்கு விமர்சனம் எழுதுறான் என்று நினைக்க வேண்டாம். நான் இங்கே சொல்ல வந்தது காவலன் மூலம் விஜயின் அடுத்த பயணம் தொடங்கிவிட்டது என்பதைத்தான். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் அதில் தொடக்கத்திற்கான முதல் படத்தை சில வரிகள் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.