மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும். நீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளைத் தகர்த்தெறிய கடைப் பிடித்த அணுகு முறைகளை நமக்குப் படிகளாக்கிக் கொள்ளவும், அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த படிக்கு மேலேறிச் செல்லவும் அவை துணைபுரியும். வாழ்க்கை வரலாறுகளை மட்டுமின்றி சாதாரண மனிதனை சாதனையாளனாக்க வழிகாட்டுகிறசுயமுன்னேற்றநூல்களைப் படிப்பது நம்மை மேன்மைப்படுத்தும்.
நெப்போலியன் கில், நார்மன் வின்சென்ட் பேல், டேல் கார்னகி, ஜேம்ஸ் கேலன், டி எட்வர்டு போனோ, ராபர்ட் ஆண்டனி போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம் வளர்ச்சிக்கு படிக்கல்லாகும். இவர்களின் நூல்கள் அந்தந்த நாட்டின் நடப்புகளுக்கும், நாகரிகங்களுக்கும் ஏற்ப எழுதப்பட்டிருப்பினும் அடிப்படையான உண்மைகள் நமக்கும் ஏற்றதே.
தமிழில் வந்துள்ள தன்னம்பிக்கையை வளர்க்கும் தரமான நூல்கள் இதோ.
1. அப்துற்றகீமின் “வாழ்க்கையில் வெற்றி”
2. அகிலனின் “வாழ்க்கையில் வெற்றி”
3. வ.உ.சி.யின் “மனம் போல் வாழ்வு”
4. மு. வரதராசனாரின் “நல்வாழ்வு”
5. விடுதலை கி. வீரமணியின் “வாழ்வியல் கட்டுரைகள்”
6. இல.செ. கந்தசாமியின் “முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்”
7. எம்.எஸ். உதயமூர்த்தியின் “எண்ணங்கள்”
8. பி.சி. கணேசனின் “உங்களால் முடியும்”
9. மெர்வினின் “வாழ்க்கை உன் கையில்”
10. பெரு. மதியழகனின் “நினைவாற்றல் மேம்பட வழி”
ஆகியவை படிக்கப் படிக்க உங்களை வெற்றிக்கு ஆற்றுப்படுத்தும் ஆற்றல் படைத்தவை.
இங்கே குறித்துள்ள நூல்கள் சிலதான். இன்னும் ஏராளமான சிறந்த நூல்களை நீங்கள் படிக்க வேண்டும். குறைந்தது இவற்றையாவது படிப்பது போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள உதவும்.
படிப்பது
9:11 am |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment