Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

ஆண் பாவம் --- தமிழ் சினிமாவின் பொக்கிஷம்


இந்தப் படம் பாண்டியராஜன் அவர்களின் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்து வெள்ளிவிழா கண்ட படம். படத்தை இப்போது வெளியிட்டாலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடக்கூடிய, எல்லாவிதமான மக்களையும் ரசிக்க வைக்கிற அளவுக்கு காமடியும், கதையை எதாத்தமாக சொல்லியிருக்கும் விதமும், கூடவே இசைஞானி இளையராஜாவின் இசையும் சேர்த்து கொண்டு படம் பார்ப்பவர்களை இப்போதும் பிரமிக்கவைக்கிறது.இந்தப் படத்தில் பாண்டியன், பாடியராஜன் , ரேவதி , சீதா, வி.கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். படத்தைப் பற்றி எழுத ஒரு உண்மையான காரணம் நான் பலமுறை படத்தை பார்த்தும் ஒரு இடங்களில் கூட திரைக்கதையில் சளிப்பு ஏற்ப்படவில்லை என்ற உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொண்டால்தான், நமக்கு பின்னால் வரும் தலைமுறையினருக்கும் நீங்களும் பகிர்ந்து கொள்வீர்கள். இந்த மாதிரி படம் இதுவரை வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆதலால் இந்தப் படத்தை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். படத்தை நீங்கள் இணையதளத்தில் பார்க்க வேண்டுமானால் தயவுசெய்து இதை கிளிக் செய்யவும்
உங்களுக்காக DVD Quality யில்

http://www.rajtamil.com/2009/08/aan-paavam1985.html

படத்தை நீங்கள் ஒரு தடவையாவது பார்த்திருப்பீர்கள். திரும்ப திரும்ப பார்க்க ஆசைப்படுபவர்களுக்காக இந்த இணையதளத்தை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்தப் படம் நாம் அனைவரும் ஒரு உலக சினிமாவை பார்க்க வேண்டுமானால் முதலில் நாம் செய்வது IMDB (Internet Movie Data Base) என்ற இணையதளத்தில் அந்தப் படத்திற்கு எவ்வளவு ரேட்டிங் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுவோம். அந்த இணையதளத்தில் ஆண் பாவம் படத்திற்கு கொடுத்த ரேட்டிங் இதோ உங்களுக்காக

IMDB Rating : 8.5/10

எனவே உலக சினிமாக்களை விமர்சனம் செய்கின்ற இந்த இணையதளம் நம் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த அதிகமான இந்தப் படத்துக்காகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.உண்மையான ஒரு விஷத்தை நான் சொல்கிறேன் படத்தின் கதையை நான் ஒருவரிகூட சொல்லவில்லை, ஏனெனில் படத்தை வரும் தலைமுறையினரும் பார்க்க வேண்டும் என்பதற்காக... எனவே நம் தமிழ் சினிமா 1985 லேயே உலகமே திரும்பி பார்க்கக்கூடிய ஒரு திரைக்கூடமாக மாற்றப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் நம் ஆட்கள் தமிழ் சினிமா உலக அளவிற்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பது ஒரு அப்பட்டமான தவறான கருத்தாகும். இதை ஒவ்வொரு திரைப்படத்துறையினரும் புரிந்து கொள்ள வேண்டும். படத்தைப் பற்றி இன்னும் ஏதாவது சுவாரசியமான சிந்தனைகள் வந்தால் இந்தப் பதிவிலேயே பதிவு செய்கிறேன். படித்த நண்பர்களுக்கு நன்றிகள்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மலைப்பாறைகளுக்கும் கண்கள் --- விமர்சனம்


ஒரு பெரிய மலைப்பாறைப்பகுதியில் செல்லும் போது எந்தவுக்கு பயம் ஒருவனை விரட்டுமோ அந்தவுக்கு இந்தப் படத்தை பார்க்கும் போது பயத்தை உண்டு பண்ணியது என்பதுதான் உண்மை. என்னடா மலைப்பாறை பகுதியை பற்றியெல்லாம் பேசறான் என்று நினைப்பீர்கள், அத்துடன் தொடர்புடைய ஒரு மிகப் பிரம்மாண்டமான திரில்லர் படம் இது. படத்தை அலெக்ஸ்சான்றா அஜா என்பவர் இயக்கி 2006 ஆம் ஆண்டில் வெளிவந்து கவனிக்கப்பட்ட படங்களில் ஒரு படமாக இதுவும் இருந்தது என்று சொல்வதில் ஒரு தவறும் இருக்காது.

படத்தை பற்றி..................

ஒரு குடும்பம் மெக்ஸிகோ பாலைவனத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது, அப்போது இடையில் காஸ் நிரப்பும் இடத்தில உள்ள ஒருவன் சொல்லும் குறுக்குவழியில் செல்கிறார்கள். அந்த வழியில் பயணம் நான்றாக உள்ளது அவர்களுக்கு, அந்த வழியின் நடுவில் சில மர்ம மனிதர்களால் அவர்களுடைய காரின் அணைத்து டயர்களும் பஞ்சர்ராகப்படுகிறது. அந்த மனிதர்கள் யாரெனில் ரத்தம் குடிக்கும் ரத்தக் காட்டேறிகள். அவர்கள் மனிதர்களின் ரத்தத்தை மட்டும் அல்ல எல்லாவிதமான விலங்குகளின் ரத்தத்தையும் குடிக்கக் கூடிய சைக்கோ மனிதர்கள் ஆவார்கள், இன்னும் இந்த உலகத்தில் இப்படிப்பட்ட சைக்கோக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனாலும் இதை என்னால் நம்ப முடியவில்லை அப்படிப்பட்ட இடங்களுக்கு போய் தான் பார்த்துவிட்டு வரவேண்டுமோ எனாவோ.....

இவ்வாறு அவர்கள் அந்த இடத்தில தங்கியிருக்கும் போது சில பல அல்லல்களுக்கு ஆளாகிறார்கள். அதில் ஒரு நாய் நான்றாக தனது முதலாளிகளை முடிந்தளவு காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. அந்தவுக்கு பயிற்சி குடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள் அந்த ஐந்தறிவு பிராணிக்கு. ஆனால் சில விசங்களை மட்டும் தான் உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். முழுவதுமாக சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது ஒரு த்ரில்லான அனுபவத்தை உங்களால் உணர முடியாது. படத்தில் அதிகளவு செலவில்லாமல் முடிந்தளவு கலை பதிவை நேர்த்தியாக மிகவும் நன்றாக செய்திருக்கிறார். இந்தப் படம் பார்க்கும் போது அவர்களது ஒரு தன்னாட்டுப் படைப்பை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதுதான் உண்மை.

படத்தில் தேர்வு செய்யப்பட்டு காட்சி படுத்தப்பட்ட இடங்கள் ஓரிரு இடங்கள் என்றாலும் அவற்றை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தில் நடித்த அணைத்து கதாபாதிரங்களுமே அவரவர் பணியை நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தை அனைவரும் கண்டிப்பாக பாருங்கள், பார்த்துவிட்டு எனது பதிவிற்கு தகுந்த பதிலை சொல்லுங்கள் நன்றி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தன் தாய் தந்தையரை தேடி ஒரு பயணம்--- விமர்சனம்




Waiting for the Clouds என்ற இந்தப் படம் எசிம் வுச்டாக்லு என்பவர் இயக்கி 2003 ஆம் ஆண்டு வெளி வந்து ஒரு நல்ல படம் என்று உலகத்தில் உள்ள அணைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் இந்தப் படம் பல சர்வதேச பட விழாக்களில் போட்டியிட்டு விருதுகளையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வயதான பெண் தன் தாய் தந்தையரை தேடிச் செல்லும் ஒரு பயணம் தான் படத்தின் கருவாகும்.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஒரு குடும்பம் பனி குளிரைத் தாங்கமுடியாமல் பிழைப்புக்காக வேறிடம் தேடி செல்கிறது. படத்தின் ஆரம்ப காட்சியே மனதை உலக்குவது போல் உள்ளதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். இவ்வாறு செல்லும் அந்தப் பயணத்தின் இடையில் தனது தாய் தந்தையை இழந்து தானும் தன் தம்பியும் ஒரு காட்டுப்பகுதியில் தவித்துக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது வேறொரு குடும்பம். அவள் தம்பியை ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட்டு அந்த பெண்ணை மட்டும் தன்னுடன் அழைத்துச்செல்கிறார்கள். அவள் வளர்த்து பெரியவளாகி சந்தோசமாய் வாழ்ந்து கொடிருக்கும் போது தன் பிறந்தது இந்த ஊரே இல்லை என்று தெரிய வருகிறது.
தான் வளரும் போது பக்கத்து வீட்டில் உறுதுணையாக இருத்த சின்னப் பையன் மற்றும் தன்னை வளர்த்த தாய் தந்தை என்று எல்லாரையும் விட்டு விட்டு எப்படி எங்கே போய் நான் என் சொந்த தாய்மொழியை தேடுவேன், அப்படி தேடினாலும் அங்கே யார் எனக்காக காத்திருப்பார்கள். இப்படியெல்லாம் தனக்குள்ளே கேள்வி கேட்டுக் கொண்டு திணறுகிறாள்.
ஒரு நல்ல விஷத்தை அடைக்கலம் கொடுத்தவர்கள் செய்திருக்கிறார்கள். அது, தான் தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கு தான் பிறந்தது மற்றும் பேசும் மொழி என எல்லாவற்றையும் மாற்றி பாசத்துடன் வளர்த்தது. இப்படி ஒவ்வொரு குடும்பமும் ஓரிரு அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்தால் போதும் நம் நாட்டில் யாருமே அனாதையாக இருக்கமாட்டார்கள் என்றும் பிச்சைகாரர்கள் இல்லாத இந்திய என்றும் ஒரு முன்னேற்றத்தை காணலாம்.
பெண் தனது பிறந்த ஊரை தேடி பயணத்தை தொடங்குகிறாள், அந்தப் பயணம் வெற்றி அடைந்தத இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். படத்தில் நடித்திருக்கும் ஐஸி எனற பெண் சிறு வயது முதல் பெரியவள் வரை மிக நன்றாக நடித்திருக்கிறாள். படத்தை இயக்கியவர் ஒரு இளம் பெண் இயக்குனர். படத்தில் கலைப் பதிவை மிக அருமையாக செய்திருக்கிறார் இயக்குனர். படித்த வாசகர்களுக்கு நன்றிகள்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எஸ்.ஜே. சூர்யா--- கவனிக்கப்பட்ட ஒரு இயககுனர்

எஸ்.ஜே.சூர்யா கவனிக்கப்பட்ட தமிழ் இயக்குனர்களில் ஒருவர் ஆவார். தமிழ் சினிமாவிற்கு புது களத்தில் படங்களை தரத்தொடங்கிய சூர்யா அவர்களின் பயணம் நன்றாக சென்று கொண்டிருந்தது. அவர் இயக்கிய முதல் படமான வாலி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய ஒரு வெற்றியை அஜித் அவர்களுக்கு தந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தது அனைவரும் அறிந்த ஒன்றே..... நான் இன்று (28/03/2011) நான் கே டிவியில் இவர் இயக்கிய வாலி படம் பார்த்தவுடன் தான் சூர்யாவை பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு தோன்றியது. நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள் சூர்யா அவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார் என்று.
ஆனால் அவர் அடுத்த ஒரு நல்ல படத்துக்கான கதை விவாதங்களில் அமைதியாக செயல்பட்டு வருகிறார். விரைவில் மீண்டும் பழைய எஸ்.ஜே.சூர்யா அவர்களை ஒரு நல்ல இயக்குனராக பார்க்கலாம் என்பதை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர் இயக்கிய இரண்டாவது படமான குஷி இதுவும் மிகபெரிய ஒரு வெற்றிப் படமாகும். விஜய்க்கும் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் என்று கூட சொல்லலாம். இவருடைய அடுத்த படைப்பான நியூ ஒரு மிகபெரிய வெற்றிப்படம் என்றும் இதில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார் என்று அனைவரும் அறியப்பட்ட ஒன்றே, ஆனால் என்னதான் நினைத்தார்களோ நம் தமிழ் சினிமா இயக்குனர்கள், ஒரு நல்ல படைப்பாளியிடம் நடிப்பு ஆசையை காட்டி விட்டார்கள்.
நியூ படத்தில் நடித்தது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்த ஒன்றே என்று அவர் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை நிறைய ஹீரோக்களிடம் சொல்லி யாரும் நடிக்க முன்வராததால் அவரே நடிக்க வேண்டியதாயிற்று. அதை தமிழ் இயக்குனர்கள் யாரும் அறிந்து கொள்ளவில்லையே. இதற்குப் பின்பு சூர்யா அவர்கள் நடிப்பிலே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அங்கிருந்துதான் அவருக்கு தொடர்ந்து சறுக்கல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதை அவர் கொஞ்சம் யோசித்து செயல் பட்டிருந்தால் திரும்பவும் தனக்கான ஒரு இடத்தை அவர் நிலைநாட்டி இருப்பார். அதை செய்ய விடாமல் தடுத்து விட்டார்களோ என்னவோ யாருக்கு தெரியும், எனினும் மீண்டும் அவர் ஒரு நல்ல படைப்பை தர வேண்டும் என்று சினிமா ரசிகன் ஒவ்வொருவனும் விரும்புகிறான் என்பதுதான் உண்மை ஏனெனில் இப்போதுள்ள சினிமா சூழலில் ஒரு நல்ல படைப்பை பார்ப்பது அரிதாக உள்ளது. சூர்யா அவர்களே நீங்கள் எங்கிருந்தாலும் சினிமா ரசிகன் ஒவ்வொருவனும் உங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம், விரைவில் உங்களது புதிய படத்தின் அறிவிப்புக்காக ...... இந்தப் பதிவை யாரேனும் எஸ்.ஜே.சூர்யா அவர்களிடம் தெரியப்படுத்துவீர்கலானால் அவர்களுக்கு கோடி நன்றிகள் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

எஸ்.ஜே. சூர்யா இதுவரை இயக்கிய படங்கள் உங்களுக்காக .....
வாலி
குஷி(தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி )
நியூ
நாணி (தெலுங்கு)
அன்பே ஆருயிரே
புலி (தெலுங்கு)
இவை அனைத்தும் ஆகும்..................

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பேசு --- இசை அலசல்


பேசு இந்தப் படம் ஒரு புதுமுக இயக்குனரின் படம் ஆகும் ஆனால் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து ஒரு பாடல் பாடவும் செய்திருக்கிறார், அந்தப் பாடலை படத்தின் இயக்குனரே எழுதியிருக்கிறார் என்பதை நான் இங்கே சொல்ல வேண்டும். மொத்தம் படத்தில் ஐந்து பாடல்கள், மீதி உள்ள நான்கு பாடல்களையும் சிநேகன் அவர்கள் எழுதியுள்ளார். ஒரு நல்ல பாடல் ஆசிரியரும் மற்றும் நல்ல இசையமைப்பாளரும் சேரும் போது பாடல்கள் நன்றாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல பாடல் ஓரளவுக்கு கேட்கும் படியாகத்தான் உள்ளது என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். படம் வெற்றியடைய படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தில் இயக்குனர் பெயர் சிரில் என்பதாகும். இதில் நடித்திருக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் புதுமுகம் தான், அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இந்தப் படத்தில் அனைத்து பாடல்களுமே மெலோடியாகதான் உள்ளது. பாடல்கள் கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது நண்பர்களே, நீங்களும் கேட்டு விட்டு சொல்லுங்கள். படம் வந்த பின்னால் படத்தை பற்றி பார்ப்போம் நான் எப்போதுமே சில படங்களுக்கு படத்தின் முடிவை தெரிந்து கொண்டுதான் படம் பார்க்க செல்வேன். படம் நல்லா இருந்தால் அந்தப் படம் யார் நடித்திருந்தாலும் படத்தை பார்ப்பதில் தவறில்லை. வாசித்த நண்பர்களுக்கு நன்றிகள்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தீவிரவாதி (தமிழ் படம் ) --- விமர்சனம்


சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படம் பல பட விழாக்களில் பல விருதுகளை பெற்றும், இரண்டு விழாக்களில் இந்தப் படம் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டும் உள்ளது அந்த அளவுக்கு நல்ல வரவேற்ப்பை உலகளவில் பெற்றது என்பதை யாராலும் பொய் என்று வாய் தவறிக் கூட சொல்ல மாட்டார்கள் என்பதுதான் உண்மை. ஏனெனில் இது ஒரு தீவீரவாதத்தை பற்றிய ஒரு படமாகும்.

இந்தப் படத்தில் ஒரு பத்தொன்பது வயது இளம் பெண் ஒரு அதிபரை கொள்வதற்காக தீவீரவாத இனத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்டு அனூப்பப்படுகிறாள். அவள் தீவிரவாதி என்று மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்க படத்தில் காட்சிபடுத்தப்பட்ட விதம் அருமையாக உள்ளது.
இந்தப் படத்தில் தீவிரவாத இளம் பெண்ணாக வரும் மல்லி என்ற கதாபாத்திரம் அருமையாக தன பணியை, ஒரு தீவிரவாதப் பெண் எவ்வாறு அமைதியாக மற்றும் எந்த இடத்தில பேச வேண்டுமோ அங்கே மட்டும் தான் பேசுவாள் மிக நன்று. படத்தை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால்தான் படம் புரியும் இல்லையெனில் படம் புரியாது, இது உண்மை என்று நீங்கள் படம் பார்க்கும் போது உணர்ந்துகொள்ள்வீர்கள். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பார்க்க வேண்டிய படமாகும். இந்தப் படம் வெளிவந்த வருடம் 1998 ஆம் ஆண்டு ஆகும். அப்போதே நம்முடைய தமிழ் சினிமா எந்தளவுக்கு எத்தனை விருதுகளை உலகளவில் பெற்றிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள ஒரு சூழலில் ஏன் இவ்வாறான ஒரு செயல்கள் நம் தமிழ் சினிமாவில் நடை பெறுவது இல்லை. இதை வருங்காலத்தில் படம் இயக்கப் போகும் ஒவ்வொரு உதவி இயக்குனரும் புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

படம் பெற்ற மற்றும் பரிந்துறைக்கப்பட்ட விருதுகளின் வரிசை உங்களுக்காக ...

வெற்றிபெற்றவை:
1999 - Cinemanila International Film Festival - Grand Jury Prize - Santosh Sivan
1999 - Cinemanila International Film Festival - Lino Brocka Award for Best film
-
Santosh Sivan
2000 - Ale Kino International Young Audience Film Festival - Poznan Goat for
Best
Director - Santosh Sivan
2000 - Sarajevo Film Festival - Panorama Jury Prize for Honorable Mention -
Santosh Sivan

பரிந்துரைக்கப்பட்டவை:

2001 - Chlotrudis Award - Best Actress - Ayesha Dharker
2001 - Phoenix Film Critics Society Award for Best Foreign Language Film

சந்தோஷ் சிவன் இப்போது உறுமி என்ற படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி முடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். விரைவில் அந்த படம் திரைக்கு வந்து வெற்றியடைய படக் குழுவினருக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம். இவருடன் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் அது எனது பாக்கியமாக கருதுவேன்....... வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Search This Blog

vks. Powered by Blogger.

Followers