Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

21 Grams ---விமர்சனம்

பொதுவாக ஒரு படத்தை எடுக்க ஏதாவது ஒரு விஷயத்தை தேடிக்கொண்டிருப்போம் ஆனால் இந்தப் படத்தின் இயக்குனர் இயக்கிய முதல் மூன்று படங்களுமே ஒருவனின் இறப்பு பற்றியே சார்ந்து உள்ளது என்பதையும் அந்த இறப்புக்குள் இரண்டு அல்லது மூன்று கதைகளையும் தெளிவாக அனைவரும் புரிந்துகொல்லும்படியாக திரைக்கதை அமைத்து படத்தை காட்சிபடுதியிருக்கிறார் என்பதை படம் பார்த்த அனைவரும் மறுக்க முடியாத ஒன்று. உங்களுக்காக அவருடைய மூன்று படங்களும் கிழே .....

1) Amores Perros
2) 21 Grams
3) Babel

இந்த மூன்று படங்களையும் நீங்கள் பார்பீர்களானால் புரிந்து கொள்ளவீர்கள், ஒரு மனிதனுடைய இறப்பைப் பற்றியே சார்ந்துள்ளது என்பதை....

படத்தைப் பற்றி ...

படத்தின் கதையை பற்றி சொல்லவேண்டுமானால் சுலபமாக சொல்லி விடலாம் ஒருவனின் இதயம் பாதிக்கப் பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது அதே நேரம் மருத்துவமனையில் வேறொருவன் விபத்துக்குள்ளாகி அங்கே கொண்டுவரப்படுகிறான். அப்போது அவன் இறந்து விடுகிறான். அவனுடைய இதயம் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் இவனுக்கு பொருத்தப்பட்டு காப்பாற்றப்படுகிறது. ஆனால் இன்னொரு கதையும் படத்தில் உள்ளது அதை நீங்கள் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக இங்கே நான் அதை குறிப்பிட விரும்பவில்லை. அதான் படத்தின் மிகவும் சுவாரசியாமான ஒரு விசயமாகும். நீங்கள் நினைப்பது போல் படம் பார்த்தால் சுலமாக புரிந்து கொள்ள முடியும் என்று மட்டும் கனவில் கூட நினைக்க வேண்டாம். ஏனெனில் அதுமாதியான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒருவன் தவறு செய்துவிட்டால் அவன் மரணத்தை தேடித்தான் போகவேண்டுமா எனபதைதான் இயக்குனர் படங்களின் மூலம் முன் வைக்கிறார். படத்தில் ஹீரோவாக வரும் கதாபாத்திரம் இதற்க்கு முன்னாடியே என் பதிவில் வந்திருக்கிறார் என்பதையும் அது ஐ ஆம் சாம் என்ற படத்தின் ஹீரோவும் ஆகும். அந்தப் படத்தில் மனநிலை முதிர்ச்சியடையாத ஒரு குழந்தை போல நடித்திருப்பார். இந்த மாதிரி படங்கள் நம் தமிழ் சினிமாவில் எப்போது பார்க்கப்போகிறோம் என்பதை மக்கள் கேட்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரு விஷத்தை சொல்ல விரும்புகிறேன்

"ஒரு படம் பாமரனுக்கு பிடித்த மாதிரியும்
படித்தவனை யோசிக்க வைக்க கூடியதாகவும் இருக்க வேண்டும் "
என்பதுதான்....... நன்றி நண்பர்களே ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மாப்பிள்ளை --- விமர்சனம்

படத்தை பற்றி ஒரு சின்ன பாடல் வரியை பாடுகிறேன் உங்களுக்காக ...

"இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த சினிமாவிலே
அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாட்டிலே
நல்ல படங்களை ஆதரிக்க மக்கள் உண்டு ஆனால்
அதை எடுப்பதற்குத்தான் ஆளில்லை சினிமாவிலே"

என்னால் முடிந்த எனக்குத் தெரிந்த ஒரு சிறிய பாடல் வரியை நான் இங்கே சொல்லிக்கொள்ள ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்....
படத்தை பற்றி .....

படம் தொடங்கும் போது காமெடியுடன் தான் தொடங்குகிறது. ஆரம்பமே சிரிப்பு என்றால் படம் நல்லா இருக்குமே என்று ஆவலோடு பார்க்க ஆரம்பித்தேன். கமெர்சியல் மாஸ் மசாலாவை நம்பின ஹீரோக்கள் அனைவரும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கப் போய்விட்ட நேரத்தில் தனுஷ் மட்டும் ஏன் இன்னமும் இந்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுக்கிறார் என்று புரியவில்லை.

தனுஷ் அவர்களே உங்களுடைய நடிப்பு ஆடுகளம் மற்றும் பொல்லாதவனில் நன்றாக வெளிப்பட்டிருந்தது. நான் கமெர்சியல் மாஸ் படங்களை தப்பு சொல்லவில்லை. அதே சமயம் வெறுக்கிரவனும் இல்லை. எந்த மாதிரியான நல்ல படங்கள் வந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும் போது எரிச்சல் தான் வருகிறது. நிறைய ப்ளாஷ் பாக் காட்சிகள் மற்றும் மனீஷாவிற்கு மகனாக வரும் ஒரு கதாபாத்திரம், அவனுடைய தாய் மனீஷாதான் என்று மக்கள் புரிந்து கொள்வதற்காவது இருவருக்கும் இடையே ஏதாவது ஒரு பேச்சு வைத்திருக்கலாம். படத்தில் ஹீரோயினுக்கும் வேலை இல்லை என்பதை படம் நீங்கள் பார்த்தால் தெளிவாக புரிந்து கொள்ளவீர்கள்.

மாப்பிள்ளை --- தகுதியை இழந்து விட்டது...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஐ ஆம் சாம் --- விமர்சனம்




இந்தப் படம் பல பட விழாக்களில் பரிந்துரை செய்யப்பட்டு சிலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறது. எனினும் படம் பார்க்கும் போது ஒரு நல்ல அனுபவத்தை நம்மால் உணர முடியும் என்பதை படம் பார்த்த யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.

படம் பார்க்கும் போது குழந்தையை வளர்க்க வேண்டிய தந்தை குழந்தை போல நடந்து கொள்ளவது மற்றும் சற்று வளர்ச்சியடையாத பருவத்திலே இருப்பது போலத்தான் கதை அமைக்கப்படிருக்கிறது. படத்தில் வரும் தந்தை மிக மிக நன்றாக நடித்திருக்கிறார். படத்தின் திரைக்கதையை மெதுவாகத்தான் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் என்றாலும் படம் பார்ப்பதற்கு நன்றாகத்தான் உள்ளது நண்பர்களே. எனக்குத் தெரிந்து இந்தப் படத்தின் கதை மற்றும் கதாப்பாதிரங்களை தான் நம் தமிழ் சினிமாவில் எ. எல். விஜய் என்ற இயக்குனர் சியான் விக்ரம் அவர்களை வைத்து தெய்வத் திருமகன் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் என்பதால் படத்தின் கதையை நான் இங்கே சொல்ல விரும்பவில்லை காரணம் தமிழ் படத்தின் வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக...

நம் தமிழ் சினிமாவில் உலகநாயகர்களை போல நடிப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள் ஆனால் பார்க்கும் போது நல்ல கதைகளை சொல்வதற்கு இங்கே இயக்குனர்கள் தான் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. சில இயக்குனர்களை தவிர, பாலா மற்றும் அமீர் மற்றும் சிலர் ..... இப்படியே தமிழ் சினிமா போய்க்கொண்டிருக்குமானால் எந்தத் தலைமுறையிலும் உலக சினிமாவிற்கு சரிசமமாக பட விழாக்களில் பங்கேற்க முடியாது என்பதுதான் உண்மை. இதை அணைத்து இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு விஷத்தை நான் இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன். விஜய் டிவி யில் வரும் குழந்தைகளுக்கான நல்ல கதையை படமாக்கும் போட்டி. அதில் போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகள் தான் இயக்குனர்கள் என்னத்த சொல்ல, ஏனெனில் குழந்தைகளுக்கு படத்தை இயக்குவது பற்றி ஒன்றுமே தெரியாது. விஜய் டிவி நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து சினிமாவை கேவலப்படுத்தாதீர்கள் என்பதுதான். இதைப் பற்றி விஜய் டிவி நிர்வாகத்துக்கு தெரியப்படுத்துங்கள் நண்பர்களே....

சியான் விக்ரம் நடிக்கும் படம் வெளிவந்த பின்னால் இரண்டு படங்களையும் சேர்த்து ஒரு பதிவில் எழுதுகிறேன். நன்றி நண்பர்களே ....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விஜயகுமார் --- மானமுள்ள தமிழன்

இதை நான் ஓரிடத்தில் படித்ததால் நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகிறேன். கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர், டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார். அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம். விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு. இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு. இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம். “நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான். இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது. சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே. கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார். டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார். அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டு தான் கொடுக்கப்பட்டது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காவலன் --- விஜயின் அடுத்த பயணத்திற்கான தொடக்கமா...

காவலன் விஜயின் 51 வது படமாகும். இதுதான் விஜயின் அடுத்த பயணத்திற்கான தொடக்கம் என்று சொல்லவதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் மற்றும் நடிக்க இருக்கும் படங்களின் வரிசையை பார்த்தால் நீங்களும் புரிந்து கொள்வீர்கள். வரிசை உங்களுக்காக
வேலாயுதம் --- ஜெயம் ராஜா
நண்பன் --- ஷங்கர்
பகலவன் --- சீமான்
பொன்னியின் செல்வன் --- மணிரத்னம்
கண்ணபிரான் --- அமீர்
மற்றும் யாவரும் நலம் படத்தின் இயக்குனர் விக்ரம் குமார், களவானி படத்தின் இயக்குனர் சற்குணம் ஆகிய இருவரின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
இவற்றை எல்லாம் பார்க்கும் போது தனது அடுத்த பயணத்தில் இளையதளபதி நன்றாக பயணம் செய்வார் என்றுதான் அவருடைய ரசிகர்கள் எதிர்பாத்து காத்துகொண்டிருக்கிறார்கள்.

காவலன் படம் சில நண்பர்கள் பார்த்து விட்டு படம் சரியில்லை என்று சொன்னார்கள், அதை என்னால் ஏற்றிக்கொள்ள முடியாது, ஏனெனில் ஒரு படத்தை பார்க்கும் போது அதுவும் மாஸ் ஹீரோவான விஜய் படங்களை பார்க்கும் போது அவர் எவ்வாறு நடித்திருக்கிறார் மற்றும் எந்தவிதமான ரோலில் நடித்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டுமே தவிர, முந்தய விஜய் படங்களை மனதிற்குள் கொண்டுவரக் கூடாது. படம் பார்க்கும் போது ஒரு நல்ல காதலின் உணர்வைக் கொடுக்கும் என்பதுதான் உண்மை. என்னடா இவ்வளவு நாள் கழித்து படத்திற்கு விமர்சனம் எழுதுறான் என்று நினைக்க வேண்டாம். நான் இங்கே சொல்ல வந்தது காவலன் மூலம் விஜயின் அடுத்த பயணம் தொடங்கிவிட்டது என்பதைத்தான். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் அதில் தொடக்கத்திற்கான முதல் படத்தை சில வரிகள் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கற்றது தமிழ் --- உண்மையான தமிழனின் உணர்ச்சி வெளிப்பாடு

படம் பார்க்கும் போது, நம் தாய் மொழியில் படித்தால் இவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக வேண்டுமா என்று ஒவ்வொரு தமிழனுடைய மனதிலும் தோன்றியிருக்கும். அதேபோல் நானும் படத்தை பார்க்கும் போது என்மனதிலும் தோன்றியது.படத்தை இயக்கியிருப்பது பாலு மகேந்திராவின் சிஷ்யனான ராம் என்பவர்தான்.

படம் மக்களிடத்தில் ஒரு நல்ல செல்வாக்கை பெரும் என்றும் அதே சமயம் லாபத்தை சம்பாதிக்கும் என்றும் இயக்குனர் நினைத்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு நல்ல திரைக் காவியத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்து அவரால் நிறுத்தியிருக்க முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை ஆகும். இப்படிப்பட்ட நல்ல படங்களை வரவேற்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு சினிமாக்காரனின் மறக்க முடியாத ஆசையில் ஒன்று. எனவே மக்கள் அதை புரிந்து கொண்டால் தான், திரைக் காவியத்தை தன வாழ்வில் ஒரு அங்கமாக அமர்த்தி தவறானவற்றை படங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் உண்மை.

பாலு மகேந்திராவின் இன்னும் ஒரு சிஷ்யரான நாம் அனைவருக்கும் தெரிந்த வெற்றிமாறன் அவர்கள், இரண்டு நல்ல காவியங்களை படைத்திருக்கிறார். அவை உங்களுக்காக.. பொல்லாதவன் மற்றும் ஆடுகளம்.
எல்லா சிஷ்யர்களும் குருவைப் போலவே இருந்தால் சினிமாவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

படத்தில் +2வில் நல்ல மதிப்பெண் பெற்று தன் தாய் மொழி தமிழை படிக்க கல்லூரியில் சேர்ந்தால் அங்கே உள்ள வாத்தியாரும் இந்த மார்க்குக்கு நல்ல enggineering college கிடைக்குமே என்று அவனுடைய ஆசையில் பின்னடைவை ஏற்ப்படுத்துவது எவ்வளவு பெரிய ஒரு தவறான விசயமாகும் அதை தெளிவாக அவன் பதில் மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

தமிழ் படித்து ஒரு பள்ளியில் மூன்று வருடங்களுக்கு மேல் வேலை செய்து வந்தாலும் அவனுடைய மாத வருமானம் 3000-5000 வரை தான் ஆனால் கணிப்பொறியில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் ஒரே வருடத்தில் அவர்களுடைய வருமானம் தேவையை விட அதிகமாக கிடைக்கிறது என்பதுதான் உண்மை என்று காட்சிகளில் தெளிவு படுத்தியிருக்கிறார். இன்னும் ஒன்று சொல்ல போனால் அவர்கள் செய்யும் பந்தாவிர்க்கு எல்லையே கிடையாது. படத்தை பார்த்து அனைவரும் இன்னும் சில விசயங்களை தெரிந்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் பேசினால் என்ன தவறு இருக்கிறது. தமிழ் மொழி மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருக்கிறது என்பதை எவராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாத ஒன்று என்பதை நான் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சாது மிரண்டா --- மக்களால் புறக்கணிக்கப்பட்டது ஏன் ?


சாது மிரண்டா என்ற தமிழ் படம் ஏன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அலசும்போது எனக்கு தெரிந்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
படத்தில் சரியான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாததும்...
படத்தை பற்றி சரியான விமர்சங்கள் வெளிவராததும்...
படத்திற்கு சரியான விளம்பரங்கள் இல்லாததும்...
படத்தில் புது முகங்கள் தான் நடித்திருக்கிறார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ .... மக்கள்...
படத்தில் நடித்தவர்கள் அனைவரும் வெளி உலகிற்கு தெரியாத ஏற்கனவே ஓரிரு படத்தில் நடித்தவர்கள் தான்...
இவை அனைத்தும்.........
படத்தின் திரைக்கதையை மிகவும் நுட்பமாக அமைத்திருக்கிறார் இயக்குனர். பொதுவாக சித்திக் படமென்றால் குடும்ப அனுதாபங்கள் அதிகாமாக இருக்கும் என்றாலும் கதையுடன் தொடர்புடையதாகத் தான் இருக்கும். படம் பார்க்கும் போது சரியாக கவனிக்காவிட்டால் படத்தில் யார்யார் என்ன கதாப் பாத்திரங்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அவ்வளவு ஒரு நுணுக்கமான திரைக்கதை. படத்தின் கதையை இங்கே நான் குறிப்பிட்டுச் சொன்னால் புரியாது பார்த்தால்தான் புரியும்.
படத்தை இயக்கியவர் சித்திக். அனைவருக்கும் தெரியும் இவரை... சில மாதங்களுக்கு முன்பு இளையதபதி நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காவலன் படத்தை இயக்கியவரும் இவரே... தமிழில் மொத்தம் நான்கு படங்கள் தான் இயக்கியிருக்கிறார். சித்திக் ஒரு நல்ல படைப்பாளி என்று சொல்லலாம் ஏனெனில் எல்லா படங்களும் அவருடைய சொந்த கதை மற்றும் திரைக்கதைதான் என்பதாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆண் பாவம் --- தமிழ் சினிமாவின் பொக்கிஷம்


இந்தப் படம் பாண்டியராஜன் அவர்களின் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்து வெள்ளிவிழா கண்ட படம். படத்தை இப்போது வெளியிட்டாலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடக்கூடிய, எல்லாவிதமான மக்களையும் ரசிக்க வைக்கிற அளவுக்கு காமடியும், கதையை எதாத்தமாக சொல்லியிருக்கும் விதமும், கூடவே இசைஞானி இளையராஜாவின் இசையும் சேர்த்து கொண்டு படம் பார்ப்பவர்களை இப்போதும் பிரமிக்கவைக்கிறது.இந்தப் படத்தில் பாண்டியன், பாடியராஜன் , ரேவதி , சீதா, வி.கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். படத்தைப் பற்றி எழுத ஒரு உண்மையான காரணம் நான் பலமுறை படத்தை பார்த்தும் ஒரு இடங்களில் கூட திரைக்கதையில் சளிப்பு ஏற்ப்படவில்லை என்ற உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொண்டால்தான், நமக்கு பின்னால் வரும் தலைமுறையினருக்கும் நீங்களும் பகிர்ந்து கொள்வீர்கள். இந்த மாதிரி படம் இதுவரை வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆதலால் இந்தப் படத்தை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். படத்தை நீங்கள் இணையதளத்தில் பார்க்க வேண்டுமானால் தயவுசெய்து இதை கிளிக் செய்யவும்
உங்களுக்காக DVD Quality யில்

http://www.rajtamil.com/2009/08/aan-paavam1985.html

படத்தை நீங்கள் ஒரு தடவையாவது பார்த்திருப்பீர்கள். திரும்ப திரும்ப பார்க்க ஆசைப்படுபவர்களுக்காக இந்த இணையதளத்தை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்தப் படம் நாம் அனைவரும் ஒரு உலக சினிமாவை பார்க்க வேண்டுமானால் முதலில் நாம் செய்வது IMDB (Internet Movie Data Base) என்ற இணையதளத்தில் அந்தப் படத்திற்கு எவ்வளவு ரேட்டிங் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுவோம். அந்த இணையதளத்தில் ஆண் பாவம் படத்திற்கு கொடுத்த ரேட்டிங் இதோ உங்களுக்காக

IMDB Rating : 8.5/10

எனவே உலக சினிமாக்களை விமர்சனம் செய்கின்ற இந்த இணையதளம் நம் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த அதிகமான இந்தப் படத்துக்காகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.உண்மையான ஒரு விஷத்தை நான் சொல்கிறேன் படத்தின் கதையை நான் ஒருவரிகூட சொல்லவில்லை, ஏனெனில் படத்தை வரும் தலைமுறையினரும் பார்க்க வேண்டும் என்பதற்காக... எனவே நம் தமிழ் சினிமா 1985 லேயே உலகமே திரும்பி பார்க்கக்கூடிய ஒரு திரைக்கூடமாக மாற்றப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் நம் ஆட்கள் தமிழ் சினிமா உலக அளவிற்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பது ஒரு அப்பட்டமான தவறான கருத்தாகும். இதை ஒவ்வொரு திரைப்படத்துறையினரும் புரிந்து கொள்ள வேண்டும். படத்தைப் பற்றி இன்னும் ஏதாவது சுவாரசியமான சிந்தனைகள் வந்தால் இந்தப் பதிவிலேயே பதிவு செய்கிறேன். படித்த நண்பர்களுக்கு நன்றிகள்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மலைப்பாறைகளுக்கும் கண்கள் --- விமர்சனம்


ஒரு பெரிய மலைப்பாறைப்பகுதியில் செல்லும் போது எந்தவுக்கு பயம் ஒருவனை விரட்டுமோ அந்தவுக்கு இந்தப் படத்தை பார்க்கும் போது பயத்தை உண்டு பண்ணியது என்பதுதான் உண்மை. என்னடா மலைப்பாறை பகுதியை பற்றியெல்லாம் பேசறான் என்று நினைப்பீர்கள், அத்துடன் தொடர்புடைய ஒரு மிகப் பிரம்மாண்டமான திரில்லர் படம் இது. படத்தை அலெக்ஸ்சான்றா அஜா என்பவர் இயக்கி 2006 ஆம் ஆண்டில் வெளிவந்து கவனிக்கப்பட்ட படங்களில் ஒரு படமாக இதுவும் இருந்தது என்று சொல்வதில் ஒரு தவறும் இருக்காது.

படத்தை பற்றி..................

ஒரு குடும்பம் மெக்ஸிகோ பாலைவனத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது, அப்போது இடையில் காஸ் நிரப்பும் இடத்தில உள்ள ஒருவன் சொல்லும் குறுக்குவழியில் செல்கிறார்கள். அந்த வழியில் பயணம் நான்றாக உள்ளது அவர்களுக்கு, அந்த வழியின் நடுவில் சில மர்ம மனிதர்களால் அவர்களுடைய காரின் அணைத்து டயர்களும் பஞ்சர்ராகப்படுகிறது. அந்த மனிதர்கள் யாரெனில் ரத்தம் குடிக்கும் ரத்தக் காட்டேறிகள். அவர்கள் மனிதர்களின் ரத்தத்தை மட்டும் அல்ல எல்லாவிதமான விலங்குகளின் ரத்தத்தையும் குடிக்கக் கூடிய சைக்கோ மனிதர்கள் ஆவார்கள், இன்னும் இந்த உலகத்தில் இப்படிப்பட்ட சைக்கோக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனாலும் இதை என்னால் நம்ப முடியவில்லை அப்படிப்பட்ட இடங்களுக்கு போய் தான் பார்த்துவிட்டு வரவேண்டுமோ எனாவோ.....

இவ்வாறு அவர்கள் அந்த இடத்தில தங்கியிருக்கும் போது சில பல அல்லல்களுக்கு ஆளாகிறார்கள். அதில் ஒரு நாய் நான்றாக தனது முதலாளிகளை முடிந்தளவு காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. அந்தவுக்கு பயிற்சி குடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள் அந்த ஐந்தறிவு பிராணிக்கு. ஆனால் சில விசங்களை மட்டும் தான் உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். முழுவதுமாக சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது ஒரு த்ரில்லான அனுபவத்தை உங்களால் உணர முடியாது. படத்தில் அதிகளவு செலவில்லாமல் முடிந்தளவு கலை பதிவை நேர்த்தியாக மிகவும் நன்றாக செய்திருக்கிறார். இந்தப் படம் பார்க்கும் போது அவர்களது ஒரு தன்னாட்டுப் படைப்பை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதுதான் உண்மை.

படத்தில் தேர்வு செய்யப்பட்டு காட்சி படுத்தப்பட்ட இடங்கள் ஓரிரு இடங்கள் என்றாலும் அவற்றை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தில் நடித்த அணைத்து கதாபாதிரங்களுமே அவரவர் பணியை நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தை அனைவரும் கண்டிப்பாக பாருங்கள், பார்த்துவிட்டு எனது பதிவிற்கு தகுந்த பதிலை சொல்லுங்கள் நன்றி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தன் தாய் தந்தையரை தேடி ஒரு பயணம்--- விமர்சனம்




Waiting for the Clouds என்ற இந்தப் படம் எசிம் வுச்டாக்லு என்பவர் இயக்கி 2003 ஆம் ஆண்டு வெளி வந்து ஒரு நல்ல படம் என்று உலகத்தில் உள்ள அணைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் இந்தப் படம் பல சர்வதேச பட விழாக்களில் போட்டியிட்டு விருதுகளையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வயதான பெண் தன் தாய் தந்தையரை தேடிச் செல்லும் ஒரு பயணம் தான் படத்தின் கருவாகும்.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஒரு குடும்பம் பனி குளிரைத் தாங்கமுடியாமல் பிழைப்புக்காக வேறிடம் தேடி செல்கிறது. படத்தின் ஆரம்ப காட்சியே மனதை உலக்குவது போல் உள்ளதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். இவ்வாறு செல்லும் அந்தப் பயணத்தின் இடையில் தனது தாய் தந்தையை இழந்து தானும் தன் தம்பியும் ஒரு காட்டுப்பகுதியில் தவித்துக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது வேறொரு குடும்பம். அவள் தம்பியை ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட்டு அந்த பெண்ணை மட்டும் தன்னுடன் அழைத்துச்செல்கிறார்கள். அவள் வளர்த்து பெரியவளாகி சந்தோசமாய் வாழ்ந்து கொடிருக்கும் போது தன் பிறந்தது இந்த ஊரே இல்லை என்று தெரிய வருகிறது.
தான் வளரும் போது பக்கத்து வீட்டில் உறுதுணையாக இருத்த சின்னப் பையன் மற்றும் தன்னை வளர்த்த தாய் தந்தை என்று எல்லாரையும் விட்டு விட்டு எப்படி எங்கே போய் நான் என் சொந்த தாய்மொழியை தேடுவேன், அப்படி தேடினாலும் அங்கே யார் எனக்காக காத்திருப்பார்கள். இப்படியெல்லாம் தனக்குள்ளே கேள்வி கேட்டுக் கொண்டு திணறுகிறாள்.
ஒரு நல்ல விஷத்தை அடைக்கலம் கொடுத்தவர்கள் செய்திருக்கிறார்கள். அது, தான் தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கு தான் பிறந்தது மற்றும் பேசும் மொழி என எல்லாவற்றையும் மாற்றி பாசத்துடன் வளர்த்தது. இப்படி ஒவ்வொரு குடும்பமும் ஓரிரு அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்தால் போதும் நம் நாட்டில் யாருமே அனாதையாக இருக்கமாட்டார்கள் என்றும் பிச்சைகாரர்கள் இல்லாத இந்திய என்றும் ஒரு முன்னேற்றத்தை காணலாம்.
பெண் தனது பிறந்த ஊரை தேடி பயணத்தை தொடங்குகிறாள், அந்தப் பயணம் வெற்றி அடைந்தத இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். படத்தில் நடித்திருக்கும் ஐஸி எனற பெண் சிறு வயது முதல் பெரியவள் வரை மிக நன்றாக நடித்திருக்கிறாள். படத்தை இயக்கியவர் ஒரு இளம் பெண் இயக்குனர். படத்தில் கலைப் பதிவை மிக அருமையாக செய்திருக்கிறார் இயக்குனர். படித்த வாசகர்களுக்கு நன்றிகள்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எஸ்.ஜே. சூர்யா--- கவனிக்கப்பட்ட ஒரு இயககுனர்

எஸ்.ஜே.சூர்யா கவனிக்கப்பட்ட தமிழ் இயக்குனர்களில் ஒருவர் ஆவார். தமிழ் சினிமாவிற்கு புது களத்தில் படங்களை தரத்தொடங்கிய சூர்யா அவர்களின் பயணம் நன்றாக சென்று கொண்டிருந்தது. அவர் இயக்கிய முதல் படமான வாலி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய ஒரு வெற்றியை அஜித் அவர்களுக்கு தந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தது அனைவரும் அறிந்த ஒன்றே..... நான் இன்று (28/03/2011) நான் கே டிவியில் இவர் இயக்கிய வாலி படம் பார்த்தவுடன் தான் சூர்யாவை பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு தோன்றியது. நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள் சூர்யா அவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார் என்று.
ஆனால் அவர் அடுத்த ஒரு நல்ல படத்துக்கான கதை விவாதங்களில் அமைதியாக செயல்பட்டு வருகிறார். விரைவில் மீண்டும் பழைய எஸ்.ஜே.சூர்யா அவர்களை ஒரு நல்ல இயக்குனராக பார்க்கலாம் என்பதை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர் இயக்கிய இரண்டாவது படமான குஷி இதுவும் மிகபெரிய ஒரு வெற்றிப் படமாகும். விஜய்க்கும் ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் என்று கூட சொல்லலாம். இவருடைய அடுத்த படைப்பான நியூ ஒரு மிகபெரிய வெற்றிப்படம் என்றும் இதில் அவரே ஹீரோவாக நடித்திருந்தார் என்று அனைவரும் அறியப்பட்ட ஒன்றே, ஆனால் என்னதான் நினைத்தார்களோ நம் தமிழ் சினிமா இயக்குனர்கள், ஒரு நல்ல படைப்பாளியிடம் நடிப்பு ஆசையை காட்டி விட்டார்கள்.
நியூ படத்தில் நடித்தது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்த ஒன்றே என்று அவர் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை நிறைய ஹீரோக்களிடம் சொல்லி யாரும் நடிக்க முன்வராததால் அவரே நடிக்க வேண்டியதாயிற்று. அதை தமிழ் இயக்குனர்கள் யாரும் அறிந்து கொள்ளவில்லையே. இதற்குப் பின்பு சூர்யா அவர்கள் நடிப்பிலே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அங்கிருந்துதான் அவருக்கு தொடர்ந்து சறுக்கல்கள் வர ஆரம்பித்துவிட்டன. அதை அவர் கொஞ்சம் யோசித்து செயல் பட்டிருந்தால் திரும்பவும் தனக்கான ஒரு இடத்தை அவர் நிலைநாட்டி இருப்பார். அதை செய்ய விடாமல் தடுத்து விட்டார்களோ என்னவோ யாருக்கு தெரியும், எனினும் மீண்டும் அவர் ஒரு நல்ல படைப்பை தர வேண்டும் என்று சினிமா ரசிகன் ஒவ்வொருவனும் விரும்புகிறான் என்பதுதான் உண்மை ஏனெனில் இப்போதுள்ள சினிமா சூழலில் ஒரு நல்ல படைப்பை பார்ப்பது அரிதாக உள்ளது. சூர்யா அவர்களே நீங்கள் எங்கிருந்தாலும் சினிமா ரசிகன் ஒவ்வொருவனும் உங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம், விரைவில் உங்களது புதிய படத்தின் அறிவிப்புக்காக ...... இந்தப் பதிவை யாரேனும் எஸ்.ஜே.சூர்யா அவர்களிடம் தெரியப்படுத்துவீர்கலானால் அவர்களுக்கு கோடி நன்றிகள் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

எஸ்.ஜே. சூர்யா இதுவரை இயக்கிய படங்கள் உங்களுக்காக .....
வாலி
குஷி(தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி )
நியூ
நாணி (தெலுங்கு)
அன்பே ஆருயிரே
புலி (தெலுங்கு)
இவை அனைத்தும் ஆகும்..................

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பேசு --- இசை அலசல்


பேசு இந்தப் படம் ஒரு புதுமுக இயக்குனரின் படம் ஆகும் ஆனால் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து ஒரு பாடல் பாடவும் செய்திருக்கிறார், அந்தப் பாடலை படத்தின் இயக்குனரே எழுதியிருக்கிறார் என்பதை நான் இங்கே சொல்ல வேண்டும். மொத்தம் படத்தில் ஐந்து பாடல்கள், மீதி உள்ள நான்கு பாடல்களையும் சிநேகன் அவர்கள் எழுதியுள்ளார். ஒரு நல்ல பாடல் ஆசிரியரும் மற்றும் நல்ல இசையமைப்பாளரும் சேரும் போது பாடல்கள் நன்றாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல பாடல் ஓரளவுக்கு கேட்கும் படியாகத்தான் உள்ளது என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். படம் வெற்றியடைய படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தில் இயக்குனர் பெயர் சிரில் என்பதாகும். இதில் நடித்திருக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் புதுமுகம் தான், அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இந்தப் படத்தில் அனைத்து பாடல்களுமே மெலோடியாகதான் உள்ளது. பாடல்கள் கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது நண்பர்களே, நீங்களும் கேட்டு விட்டு சொல்லுங்கள். படம் வந்த பின்னால் படத்தை பற்றி பார்ப்போம் நான் எப்போதுமே சில படங்களுக்கு படத்தின் முடிவை தெரிந்து கொண்டுதான் படம் பார்க்க செல்வேன். படம் நல்லா இருந்தால் அந்தப் படம் யார் நடித்திருந்தாலும் படத்தை பார்ப்பதில் தவறில்லை. வாசித்த நண்பர்களுக்கு நன்றிகள்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தீவிரவாதி (தமிழ் படம் ) --- விமர்சனம்


சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படம் பல பட விழாக்களில் பல விருதுகளை பெற்றும், இரண்டு விழாக்களில் இந்தப் படம் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டும் உள்ளது அந்த அளவுக்கு நல்ல வரவேற்ப்பை உலகளவில் பெற்றது என்பதை யாராலும் பொய் என்று வாய் தவறிக் கூட சொல்ல மாட்டார்கள் என்பதுதான் உண்மை. ஏனெனில் இது ஒரு தீவீரவாதத்தை பற்றிய ஒரு படமாகும்.

இந்தப் படத்தில் ஒரு பத்தொன்பது வயது இளம் பெண் ஒரு அதிபரை கொள்வதற்காக தீவீரவாத இனத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்டு அனூப்பப்படுகிறாள். அவள் தீவிரவாதி என்று மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்க படத்தில் காட்சிபடுத்தப்பட்ட விதம் அருமையாக உள்ளது.
இந்தப் படத்தில் தீவிரவாத இளம் பெண்ணாக வரும் மல்லி என்ற கதாபாத்திரம் அருமையாக தன பணியை, ஒரு தீவிரவாதப் பெண் எவ்வாறு அமைதியாக மற்றும் எந்த இடத்தில பேச வேண்டுமோ அங்கே மட்டும் தான் பேசுவாள் மிக நன்று. படத்தை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால்தான் படம் புரியும் இல்லையெனில் படம் புரியாது, இது உண்மை என்று நீங்கள் படம் பார்க்கும் போது உணர்ந்துகொள்ள்வீர்கள். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பார்க்க வேண்டிய படமாகும். இந்தப் படம் வெளிவந்த வருடம் 1998 ஆம் ஆண்டு ஆகும். அப்போதே நம்முடைய தமிழ் சினிமா எந்தளவுக்கு எத்தனை விருதுகளை உலகளவில் பெற்றிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள ஒரு சூழலில் ஏன் இவ்வாறான ஒரு செயல்கள் நம் தமிழ் சினிமாவில் நடை பெறுவது இல்லை. இதை வருங்காலத்தில் படம் இயக்கப் போகும் ஒவ்வொரு உதவி இயக்குனரும் புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

படம் பெற்ற மற்றும் பரிந்துறைக்கப்பட்ட விருதுகளின் வரிசை உங்களுக்காக ...

வெற்றிபெற்றவை:
1999 - Cinemanila International Film Festival - Grand Jury Prize - Santosh Sivan
1999 - Cinemanila International Film Festival - Lino Brocka Award for Best film
-
Santosh Sivan
2000 - Ale Kino International Young Audience Film Festival - Poznan Goat for
Best
Director - Santosh Sivan
2000 - Sarajevo Film Festival - Panorama Jury Prize for Honorable Mention -
Santosh Sivan

பரிந்துரைக்கப்பட்டவை:

2001 - Chlotrudis Award - Best Actress - Ayesha Dharker
2001 - Phoenix Film Critics Society Award for Best Foreign Language Film

சந்தோஷ் சிவன் இப்போது உறுமி என்ற படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி முடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். விரைவில் அந்த படம் திரைக்கு வந்து வெற்றியடைய படக் குழுவினருக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம். இவருடன் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் அது எனது பாக்கியமாக கருதுவேன்....... வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குள்ளநரிக் கூட்டம் --- விமர்சனம்

இயக்குனர் சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீ பாலாஜி என்பவர்தான் இந்தப் படத்தை இயக்கியவர். நான் முன்னாடியே இந்தப் படத்தின் பாடல்கள் பற்றி அலசும் போது நான் ஒரு விஷத்தை சொல்லி இருந்தேன் அதற்க்கு என்னை முதலில் நீங்கள் மன்னித்து விடுங்கள்.(அது குள்ளநரிகள் திட்டம் தீட்டினால் அது வெற்றி தான் என்று நான் சொல்லியிருப்பேன் அதற்காகத்தான் இந்த மன்னிப்பு). படத்தின் முதல் பாதியில் மட்டும் ஹீரோயினை நடிக்க வைத்திருக்கிறார்கள். இராண்டாம் பாதியில் ஹீரோயினை பார்க்கவே முடியவில்லை. இன்னமும் இந்த இயக்குனர் தமிழ் சினிமாவின் தொடர் பார்முலாவை விட்டு வெளியே வரவில்லை என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் என்னால் நம்பமுடியவில்லை ஏனெனில் இந்த இயக்குனர் படத்துக்கு படம் ஏதாவது பண்ண வேண்டும் என்று நினைக்கக் கூடிய சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியது என்பதை ....... நான் பார்த்த நிறைய படங்களில், போலீஸ் தப்பு பண்ணினால் தான் அந்தப் படம் நல்ல வருமா என்ன... அதை ஒரு கருவாக எடுத்துக் கொண்டு, ஏன் மக்களின் மனதில் போலிசை பற்றி ஒரு தவறான என்னத்தை உண்டுபண்ணுகிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவு செய்து வருகால இயக்குனர்களே இதை மாற்றிக் காட்டுங்கள். படத்தில் விழிகளிலே என்ற பாடல் இனிமையாக உள்ளது மற்றும் குள்ளநரிக் கூட்டம் என்ற பாடல் ஓகே என்றுதான் சொல்லமுடியும். இந்த விமர்சனத்தை படித்து விட்டும் நீங்கள் படம் பார்பீர்களானால் அது நீங்கள் சினிமா மீது வைத்திருக்கும் ஒரு மரியாதையைத்தான் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிரின்சஸ் அரோரா --- விமர்சனம்

பிரின்சஸ் அரோரா என்ற இந்தப் பெயருக்கு " ஒரு அழகான தேவதையின் தூக்கநிலை " எனற ஒரு அற்ப்புதமான நல்ல பொருள் விரிவை தரக்கூடிய ஒன்றாகும். இந்தப் தலைப்பிற்கு தகுந்தாற்போல் இந்தப் படமும் ஒரு நல்ல இடத்தை, தாய்மார்களின் மனதில் சில தவறுகளுக்கு அவர்கள் என்ன நினைப்பார்களோஅதைத் தான் இந்தப் படம் செய்திருக்கிறது என்றும் படத்தின் இயக்குனர் செய்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.
இந்தப் படம் குழந்தைகளுக்கான குறிப்பாக பெண் குழந்தைகள் எப்படியெல்லாம் அவதிக்குள்ளாகிறார்கள் என்பதை சொல்லும் படம் என்று சொல்வதை விட ஒரு ஆறுவயதுக் பெண் குழந்தை பள்ளி முடிந்தவுடன் தன் தாய் வந்து தன்னை விட்டிற்கு அழைத்துச் செல்வாள் என்று காத்திருக்கிறாள். வெகுநேரம் ஆகியும் தன் தாய் வராததால் அந்தக் குழந்தை தானாகவே ஒரு கால்டாக்ஸ்சியை பிடித்து விட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறாள். அபோதான் அவள் தன்னிடம் உள்ள பணத்தை எடுத்துப் பார்க்கும் போது கொஞ்சம் குறைவாக உள்ளது(வண்டி வாடகைக்கு ). அதை அந்தக் குழந்தை அந்த வண்டியின் ஓட்டுனரிடம் கூறும்போது அவர் என்ன செய்திருக்க வேண்டும் ( ஒரு குழந்தை அல்லவா அவள், அவளை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார் ஒவ்வொரு குழந்தையையும் தன் குழந்தையைப் போல பாதுகாக்கவேண்டும் அல்லவா ? ஓட்டுனர் அவ்வாறு செய்யாததால் அந்தப் குழந்தை சில கயவர்களின் கையில் சிக்கி கற்பழிக்கப்பட்டு நிவானமாக்கப்பட்டு கொலை செய்து குப்பையில் எரிந்து விடுகிறார்கள் ) அந்த ஓட்டுனர் அந்தக் குழந்தையை தன் குழந்தை போல பாவித்து வீடு வரை கொண்டுசேர்த்து அவள் தாயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்ல. இதே அவருடைய குழந்தையாக இருதால் இவ்வாறு செய்திருப்பாரா என்ற கேள்வியை இங்கே நான் கேட்டால் தான் எல்லாரும் யோசித்துப் பார்ப்பார்கள்.
இவ்வாறு தான் குழந்தை நிவானமாக்கப்பட்டு கொள்ளப்பட்டு குப்பையில் எரிந்தததை பார்த்த அவளின் தாய் அவர்களை பழிவாங்க வேண்டுமென்று நினைக்கிறாள், இதுதான் ஒவ்வொரு தாயின் ஒரு ஆதங்க ஆசையாகும் ஆனால் எத்தனை தாய்மார்கள் உண்மையாக இந்த ஆதங்க ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதை கைவிட்டு எண்ணிவிடலாம் என்பதுதான் உண்மை. ஆதலால் இந்தப் படத்தில் அந்தக் குழந்தையின் தாய் செய்ததை எந்தெந்த தாய் செய்கிறாளோ அவர்களுக்கெல்லாம் எல்லாவிதமான மக்களும் ஆதரவு அளிக்கவேண்டும் என்பதுதான் இளைய சமுதாயத்தின் கோரிக்கை ஆகும் .
படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் கதை சொல்லும் விதம் மிக மிக நன்றாக உள்ளது. இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். எனவே தமிழ் சினிமாவிலும் இப்படிப்பட்ட படங்கள் உருவாகும் நிலை வெகு தூரத்தில் இல்லை. அப்படிப்பட்ட படங்கள் வரும் போது அதைமக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இயக்குனர் மற்றும் உதவிஇயக்குனர்களின் ஆசையும் அன்பான கோரிக்கையும் ஆகும்.
படத்தை அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்......... விமர்சனங்களை சொல்லுங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழக அச்சுக் கலையின் ஆரம்பம் எப்போது ...


ஹென்றிக் என்ரி கியூஸ் எனற ஒரு பாதிரியாரால் 1578 -இல் நெல்லை மாவட்டத்தில் புன்னைக் காயல் என்ற இடத்தில தொடங்கப்பட்ட அச்சகம் தான் முதல் தமிழ் அச்சகம் ஆகும்.எனவே இந்த ஹென்றி என்பவர்தான் தமிழ் அச்சுக்கலையின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர் தனது இருபத்து ஒன்பதாவது வயதில் தூத்துக்குடிக்கு வந்தவர் தமிழ் கற்று குருக்கள் மடம் நடத்தினார். பக்தர்களுக்கு தமிழிலேயே பாவ மன்னிப்பு வழங்கிய முதல் பாதிரியார் இவர்தான். நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துவ மதத்துக்கு ஒரு இடத்தை பெறச்செய்த சவேரியாரின் நெருங்கிய நண்பராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹென்றி என்பவர், அனைவரும் பிரச்சாரத்துக்கு தமிழ்நூல்களை தான் பயபடுத்தவேண்டும் என்று சவேரியார் முதற்கொண்டு அனவைவருக்கும் அன்புக் கட்டளையாக கூறினார் என்பது உண்மை ஆகும். "தம்பிரான் வணக்கம் " என்ற சவேரியாரின் நூலை மொழி பெயர்த்தவர் ஹென்றி என்பவரே...இவருடன் சேர்ந்து ஜோ .டி. பாரியா மற்றும் கொன்சால்வசு என்ற பாதிரியார்களும் பணி புரிந்தனர்.இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள். குறிப்பாக ஜோ . டி.பாரியா என்பவர் தமிழ் எழுத்துக்குகளை அதிகமாக செதுக்கினார். 1578 ல் "ஞானோபதேசம்" என்ற நூல் அச்சிடப்பட்டது. அடுத்து 1579 ல் இரண்டு நூல்கள் வெளியாயின அவை மீண்டும் "தம்பிரான் வணக்கம் " மற்றும் "பாவ சங்கீர்த்தனம் " இவை இரண்டும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் உள்ள போட்லியன் நூலகத்தில் உள்ளது.இநத நூல்களை எல்லாம் எழுதியவர் ஹென்றிக் என்பவர்தான். தமிழக அச்சுக் கலையின் தந்தையான இவர் தனது என்பதாவது வயதில் மரணமடைந்தார். அவரது விருப்பப்படி தூத்துக்குடியில் உள்ள பணிமாத ஆலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. .....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Search This Blog

vks. Powered by Blogger.

Followers