Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

குள்ளநரிக் கூட்டம் --- விமர்சனம்

இயக்குனர் சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீ பாலாஜி என்பவர்தான் இந்தப் படத்தை இயக்கியவர். நான் முன்னாடியே இந்தப் படத்தின் பாடல்கள் பற்றி அலசும் போது நான் ஒரு விஷத்தை சொல்லி இருந்தேன் அதற்க்கு என்னை முதலில் நீங்கள் மன்னித்து விடுங்கள்.(அது குள்ளநரிகள் திட்டம் தீட்டினால் அது வெற்றி தான் என்று நான் சொல்லியிருப்பேன் அதற்காகத்தான் இந்த மன்னிப்பு). படத்தின் முதல் பாதியில் மட்டும் ஹீரோயினை நடிக்க வைத்திருக்கிறார்கள். இராண்டாம் பாதியில் ஹீரோயினை பார்க்கவே முடியவில்லை. இன்னமும் இந்த இயக்குனர் தமிழ் சினிமாவின் தொடர் பார்முலாவை விட்டு வெளியே வரவில்லை என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் என்னால் நம்பமுடியவில்லை ஏனெனில் இந்த இயக்குனர் படத்துக்கு படம் ஏதாவது பண்ண வேண்டும் என்று நினைக்கக் கூடிய சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியது என்பதை ....... நான் பார்த்த நிறைய படங்களில், போலீஸ் தப்பு பண்ணினால் தான் அந்தப் படம் நல்ல வருமா என்ன... அதை ஒரு கருவாக எடுத்துக் கொண்டு, ஏன் மக்களின் மனதில் போலிசை பற்றி ஒரு தவறான என்னத்தை உண்டுபண்ணுகிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவு செய்து வருகால இயக்குனர்களே இதை மாற்றிக் காட்டுங்கள். படத்தில் விழிகளிலே என்ற பாடல் இனிமையாக உள்ளது மற்றும் குள்ளநரிக் கூட்டம் என்ற பாடல் ஓகே என்றுதான் சொல்லமுடியும். இந்த விமர்சனத்தை படித்து விட்டும் நீங்கள் படம் பார்பீர்களானால் அது நீங்கள் சினிமா மீது வைத்திருக்கும் ஒரு மரியாதையைத்தான் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிரின்சஸ் அரோரா --- விமர்சனம்

பிரின்சஸ் அரோரா என்ற இந்தப் பெயருக்கு " ஒரு அழகான தேவதையின் தூக்கநிலை " எனற ஒரு அற்ப்புதமான நல்ல பொருள் விரிவை தரக்கூடிய ஒன்றாகும். இந்தப் தலைப்பிற்கு தகுந்தாற்போல் இந்தப் படமும் ஒரு நல்ல இடத்தை, தாய்மார்களின் மனதில் சில தவறுகளுக்கு அவர்கள் என்ன நினைப்பார்களோஅதைத் தான் இந்தப் படம் செய்திருக்கிறது என்றும் படத்தின் இயக்குனர் செய்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.
இந்தப் படம் குழந்தைகளுக்கான குறிப்பாக பெண் குழந்தைகள் எப்படியெல்லாம் அவதிக்குள்ளாகிறார்கள் என்பதை சொல்லும் படம் என்று சொல்வதை விட ஒரு ஆறுவயதுக் பெண் குழந்தை பள்ளி முடிந்தவுடன் தன் தாய் வந்து தன்னை விட்டிற்கு அழைத்துச் செல்வாள் என்று காத்திருக்கிறாள். வெகுநேரம் ஆகியும் தன் தாய் வராததால் அந்தக் குழந்தை தானாகவே ஒரு கால்டாக்ஸ்சியை பிடித்து விட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறாள். அபோதான் அவள் தன்னிடம் உள்ள பணத்தை எடுத்துப் பார்க்கும் போது கொஞ்சம் குறைவாக உள்ளது(வண்டி வாடகைக்கு ). அதை அந்தக் குழந்தை அந்த வண்டியின் ஓட்டுனரிடம் கூறும்போது அவர் என்ன செய்திருக்க வேண்டும் ( ஒரு குழந்தை அல்லவா அவள், அவளை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார் ஒவ்வொரு குழந்தையையும் தன் குழந்தையைப் போல பாதுகாக்கவேண்டும் அல்லவா ? ஓட்டுனர் அவ்வாறு செய்யாததால் அந்தப் குழந்தை சில கயவர்களின் கையில் சிக்கி கற்பழிக்கப்பட்டு நிவானமாக்கப்பட்டு கொலை செய்து குப்பையில் எரிந்து விடுகிறார்கள் ) அந்த ஓட்டுனர் அந்தக் குழந்தையை தன் குழந்தை போல பாவித்து வீடு வரை கொண்டுசேர்த்து அவள் தாயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்ல. இதே அவருடைய குழந்தையாக இருதால் இவ்வாறு செய்திருப்பாரா என்ற கேள்வியை இங்கே நான் கேட்டால் தான் எல்லாரும் யோசித்துப் பார்ப்பார்கள்.
இவ்வாறு தான் குழந்தை நிவானமாக்கப்பட்டு கொள்ளப்பட்டு குப்பையில் எரிந்தததை பார்த்த அவளின் தாய் அவர்களை பழிவாங்க வேண்டுமென்று நினைக்கிறாள், இதுதான் ஒவ்வொரு தாயின் ஒரு ஆதங்க ஆசையாகும் ஆனால் எத்தனை தாய்மார்கள் உண்மையாக இந்த ஆதங்க ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதை கைவிட்டு எண்ணிவிடலாம் என்பதுதான் உண்மை. ஆதலால் இந்தப் படத்தில் அந்தக் குழந்தையின் தாய் செய்ததை எந்தெந்த தாய் செய்கிறாளோ அவர்களுக்கெல்லாம் எல்லாவிதமான மக்களும் ஆதரவு அளிக்கவேண்டும் என்பதுதான் இளைய சமுதாயத்தின் கோரிக்கை ஆகும் .
படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் கதை சொல்லும் விதம் மிக மிக நன்றாக உள்ளது. இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். எனவே தமிழ் சினிமாவிலும் இப்படிப்பட்ட படங்கள் உருவாகும் நிலை வெகு தூரத்தில் இல்லை. அப்படிப்பட்ட படங்கள் வரும் போது அதைமக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இயக்குனர் மற்றும் உதவிஇயக்குனர்களின் ஆசையும் அன்பான கோரிக்கையும் ஆகும்.
படத்தை அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்......... விமர்சனங்களை சொல்லுங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழக அச்சுக் கலையின் ஆரம்பம் எப்போது ...


ஹென்றிக் என்ரி கியூஸ் எனற ஒரு பாதிரியாரால் 1578 -இல் நெல்லை மாவட்டத்தில் புன்னைக் காயல் என்ற இடத்தில தொடங்கப்பட்ட அச்சகம் தான் முதல் தமிழ் அச்சகம் ஆகும்.எனவே இந்த ஹென்றி என்பவர்தான் தமிழ் அச்சுக்கலையின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர் தனது இருபத்து ஒன்பதாவது வயதில் தூத்துக்குடிக்கு வந்தவர் தமிழ் கற்று குருக்கள் மடம் நடத்தினார். பக்தர்களுக்கு தமிழிலேயே பாவ மன்னிப்பு வழங்கிய முதல் பாதிரியார் இவர்தான். நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துவ மதத்துக்கு ஒரு இடத்தை பெறச்செய்த சவேரியாரின் நெருங்கிய நண்பராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹென்றி என்பவர், அனைவரும் பிரச்சாரத்துக்கு தமிழ்நூல்களை தான் பயபடுத்தவேண்டும் என்று சவேரியார் முதற்கொண்டு அனவைவருக்கும் அன்புக் கட்டளையாக கூறினார் என்பது உண்மை ஆகும். "தம்பிரான் வணக்கம் " என்ற சவேரியாரின் நூலை மொழி பெயர்த்தவர் ஹென்றி என்பவரே...இவருடன் சேர்ந்து ஜோ .டி. பாரியா மற்றும் கொன்சால்வசு என்ற பாதிரியார்களும் பணி புரிந்தனர்.இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள். குறிப்பாக ஜோ . டி.பாரியா என்பவர் தமிழ் எழுத்துக்குகளை அதிகமாக செதுக்கினார். 1578 ல் "ஞானோபதேசம்" என்ற நூல் அச்சிடப்பட்டது. அடுத்து 1579 ல் இரண்டு நூல்கள் வெளியாயின அவை மீண்டும் "தம்பிரான் வணக்கம் " மற்றும் "பாவ சங்கீர்த்தனம் " இவை இரண்டும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் உள்ள போட்லியன் நூலகத்தில் உள்ளது.இநத நூல்களை எல்லாம் எழுதியவர் ஹென்றிக் என்பவர்தான். தமிழக அச்சுக் கலையின் தந்தையான இவர் தனது என்பதாவது வயதில் மரணமடைந்தார். அவரது விருப்பப்படி தூத்துக்குடியில் உள்ள பணிமாத ஆலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. .....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குஜராத் --- சிங்கப்பூருடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்


















குஜராத் மாநிலத்தை உலகத்தோடு ஒப்பிட்டு ஒரு ஆய்வறிக்கையை
International council என்ற ஒரு நிறுவனம் அனைவரும் கவனிக்கக்கூடிய அளவிற்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ........ குஜராத் மாநில அரசு உலகிலேயே இரண்டாவது நல்ல மாநிலஅரசாக உள்ளது எனற செய்தியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது... இதை தயவுசெய்து மற்ற மாநில அரசுகளுக்கு தெரியபடுத்த வேண்டியது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். எனவே மற்ற மாநிலஅரசுகள் தயவு செய்து மக்களுக்கு சலுகைகளை குடுத்து ஏமாற்றுவதை விட்டுவிட்டு குஜராத் மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்பது மக்களின் நாயமான ஒரு கோரிக்கை ஆகும்.

அப்படி என்னதான் குஜராத் மாநில அரசு செய்து விட்டது அதற்க்கு International council இரண்டாவது இடத்தை கொடுத்துவிட்டது என்று எல்லாரும் நினைக்கலாம். எதனால் எனில் குஜராத் மாநில அரசு கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் உலக வங்கியில் 50,000 கோடி ருபாய் கடனில் இருந்தது. ஆனால்அந்த மாநிலத்தின் முதல்வர்கள் யாராறேன்று எனக்கு தெரியாது ஆனால்அவர்கள் எவ்வாறு செயல்பட்டு இப்போது அந்த அரசை உலக வங்கியில் ஒரு லட்சம் கோடி இருப்புத்தொகையாக வைத்திருக்கும் அளவுக்கு அந்த அரசு முன்னேறியிருக்கிறது... வாழ்த்துக்குகள் அந்த அரசுக்கு மற்றும் இந்தியாவிற்கு முன்னோடியாக இருப்பதற்கு ........
குஜராத் மாநில அரசின் திட்டங்கள் ...
மதுக்கடைகள் இல்லாதது
மின்சாரம் தடை இல்லை
யாருக்கும் எந்த சலுகைகளும் கிடையாது
பெண்கள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி முறை
இப்படியே குஜராத் மாநில அரசு செயல்பட்டு வருமேயானால் இன்னும் பத்துவருடங்களில் ஒரு நல்ல மாநில அரசாக மற்ற மாநில அரசுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு மினி சிங்கப்பூரை நம் இந்தியாவிலும் பார்க்கலாம் ...............
எனவே மற்ற இந்தியாவிலுள்ள மாநில அரசுகளின் நிலைமை ?????????????????
நீங்கள் தான் சொல்லவேண்டும் ,,,, எனவே வாக்களிக்கும் போது ஒரு நல்ல முதல்வரை தயவுசெய்து தேர்ந்தெடுங்கள் இந்தியக் குடிமகன்களே .................. இன்னும் இருபது வருடங்களில்இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் உலகிற்கே ஒரு முன்னோடிநாடாக மாற்றி காட்ட வேண்டும் என்பது நம் அனைவரின் கடமையாகும்.
மாற்ற முயசிப்போம் மாற்றி காட்டுவோம் ....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எவண்டி உன்ன பெத்தான் --- பாடல் ஒரு அலசல்












பேபி யை பீல் லைக் பிளையிங்
பிளையிங் அப் அப் அப் இன் தி ஏற்
வென் யை லுக் அட் யு , யு லுக் அட் மீ லைக்
யு வண்ணா மேக் லவ் டு மீ தேர்

உன்ன பாத்தா பஸ்ட்டு செகண்ட் ’ல என்ன காணும்
தேடி பாக்குறேன் கண்டபடி நானும்
பாத பஸ்ட்டு செகண்ட் ’ல இருந்தே என்ன காணும்
தேடி பாக்குறேன் கண்டபடி நானும்
சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நா வேணும்
சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நா வேணும்
ஒன்னு என கண்டு புடிச்சு குடேன்
இல்ல ரொம்ப சிம்பிள் உன்ன எனக்கு குடேன்
இல்ல தயவு செஞ்சு ஒரு கன் எடுத்து என்ன சுடேன்

எவன் டி உன்ன பெத்தான்
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்
எவன் டி உன்ன பெத்தான்
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான்

என்ற இந்தப் பாடல் சிம்பு யாரைநினைத்து எழுதினார் என்று நம் அனைவருக்கும் தெரியும் என்றுதான் நினைக்கிறேன். அதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன் . எல்லாருக்கும் தெரியும் சிம்புவுக்கும் நயதாரவுக்கும் காதல் மலர்ந்து உதிர்ந்தது. ஆனால் இந்தப் பாடலுக்கு நம் மகளிர் அமைப்பினர் எதிப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கி வருகிறனர். அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் இந்தப் பாடலை எழுதிய சிம்பு அவர்கள் எதிப்பு தெரிவித்ததுக்கு ஏதாவது ஒரு காரணத்தை சொன்னால் அந்த அமைப்பினர் மற்றும் மகளிர் எல்லாரும் வந்து குடும்பத்தோடு படம் பார்ப்பார்கள் அல்லவா ...... அதை ஏன் நீங்கள் யோசிக்கவேயில்லை. படத்தின் தயாரிப்பாளர் உங்கள் மனதில் இருந்திருந்தால் அதை நீங்கள் யோசித்திருப்பீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு படத்தில் தவறு இருந்தால் அதை மக்கள் கேட்டும் போது நாம் அதன் விவரத்தை எடுத்து சொன்னால் தான் அவர்களுக்கு புரியும் ............ சிம்பு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்தப் பாடலின் உண்மையையை தயவு செய்து மகளிர் அமைப்புக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்பதுதான் .


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஸ்டிக் இட் --- விமர்சனம்

இந்தப் படம் நல்ல ஒரு காமடியான ஜிம்னாஸ்டிக் சாதனையாளர்கள் பற்றிய ஒரு படம் என்றும் படத்தை இயக்கிருப்பது ஒரு பெண் இயக்குனர் என்று சொல்லவதை விட ஒரு அழகான ஸ்க்ரீன் ரைட்டர் மற்றும் நாவெல் ரைட்டரும் என்பதுதான் உண்மை. படம் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக வந்திருப்பது தான் உண்மையும் கூட ......... ஆனால் இது முழுக்க முழுக்க பெண் ஜிம்னாச்டிக்களை பற்றிய படம். இந்தப் படத்தில் தேர்வு செய்த நாயகிகள் அனைத்தும் அவரவர் வேலைகளை அற்புதமாக செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் இது ஒரு பொழுதுபோக்குபடம் என்பதால் தான் நான் அனைவரையும் நான் பார்க்க சொல்கிறேன். இப்படத்தில் VGA (Vickerman Gymnasts Academy) தலைமையில் தான் பெண்கள் அனைவரும் அந்தப் சாதனை போட்டிக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். படத்தில் ஒரு பெண்ணின் பிரா (bra) விளையாடும் போது தெரிந்ததால் அந்தப் பெண்ணிற்கு மதிப்பெண்ணை குறைவாக அல்லது வழங்க மறுத்து விடுவார் ஒரு ஜட்ஜ். அந்த ஜட்ஜ் யாரென்றால் இந்த VGA வின் ஒரு மாணவி என்பதாலோ என்னவோ அவ்வாறு செய்கிறார். அதன் பின்புதான் படத்தில் சில காட்சிகள் நன்றாகஅமைத்திருக்கிறார் இயக்குனர் படத்தை பார்த்தல் தான் உங்களுக்கும் புரியும்.

இந்தப் படத்தை பாராட்டவேண்டிய சில விஷயங்கள்
படத்தின்
காட்சியமைப்புகள்
படத்தின்
நடித்த மற்றும் தேர்வுசெய்யப்பட்ட கதாபாத்திரங்கள்
பின்னணி
இசை சேர்ப்பு
Vickerman ஆகா நடித்திருக்கும் பாத்திரம்
மொத்தத்தில் படம் பார்ப்பதற்கு நன்றாகவும் நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இருக்கிறது.

படத்தை நமக்காக கொடுத்த ஜெஸ்ஸிகா பெண்டின்கர் அவர்களுக்கு நன்றி......
ஜெஸ்ஸிகா பெண்டின்கர் எழுதிய ஸ்க்ரீன் ரைட்டிங் உங்களுக்காக .......
1) Bring it on (2000)
2) First daughter (2004)
3) Aquamarine (2006)
4) Sex and the city (2006)

இவை அனைத்தும் ஆகும் ....................

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வானம் --- இசை அலசல்


வானம் இந்தப் படம் ஒரு தெலுங்கு ரீமேக் படம் ஆகும் தெலுங்கில் போனவருடம் வெளிவந்த வேதம் படத்தின் மறுபதிப்பு தான் இந்த வானம் ஆனால் பாடல்கள் எதுவும் அந்தப் பதிப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது ஆனால் ஒரு விஷயம் எனக்கு நன்றாக தெரியும் தெலுங்கு பதிப்பான வேதம் வெற்றியடையாத ஒரு படம் என்றுதான் .... ஆனால் அந்தப் படத்தின் இயக்குனர்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். ஒருமொழியில் தோல்வியடைந்த படத்தை மறுமொழியில் எடுக்க முன்வந்ததயாரிப்பாளருக்கு படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.இந்தப் படத்தின் முதல் ஹீரோ சிலம்பரசன் அவர்களை எனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா வில் இருந்துதான் எனக்குபிடிக்கும் அவருடைய நடிப்பு வெளிவந்த படம் அதுவாகத்தான் இருக்கும். இந்தப்படத்தின் இசையமைப்பாளர் யுவனைப் பற்றி சொல்லத் தேவையில்லை அனைவருக்கும் தெரியும் .

படத்தின் பாடல்களைப் பற்றி ....

1) Evan Di Una Pethan --- எவண்டி உன்ன பெத்தான் என்ற இந்தப் பாடல் நாம்அனைவரும் அறிந்த ஒன்றே அதேபோல் இந்தப் பாட்டிற்கு மகளிர் அமைப்பினர்சில கோசங்களையும் எழுப்பியது அனைவருக்கும் தெரியும் ஆனாலும் பாடல்ஹிட் உண்மையிலேயே பாட்டு நல்ல இருக்குங்க ,,, முக்கியமான ஒன்று இந்தப்பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் சிம்பு தான்.
... 5/5


2) No Money No Honey --- இந்தப் பாடல் காசு இல்லையென்றால் வாழ்வில் ஒருசுவாரசியம் இருக்காது என்று சொல்லுகிறது அது உண்மையா என்றுஅவரவர்களுக்குத்தான் தெரியும் ஒருவன் வாழ்க்கையை இன்னொருவரால்கண்டுபிடிக்க முடியாது என்பதாகும் பாடல் நன்றாக உள்ளது .
... 4/5


3) Who I Am --- இந்தப் பாடல் எங்கேயோ கேட்ட மாதிரி உள்ளது என்றுதான்நினைக்கிறேன் எனினும் எனக்கு தோன்றுவது மைக்கில் ஜாக்சனின் எதோ ஒருஆல்பம் என்று எனக்கு தோன்றுகிறது நீங்களும் கேட்டால் புரிந்துகொள்வீர்கள்.
... 3/5


4) Cable Raja --- இந்தப் பாடல் நல்ல ஒரு செம குத்துப் பாடல் என்றுதான்சொல்லவேண்டும் இது சிம்புவின் மாஸ் பாடலாக இருக்கும் ஏனெனில் இந்தப்படத்தின் அவர் கேபிள் ஆபரேட்டராக நடித்திருக்கிறார் .
... 3/5


5) Vaanam --- வானம் என்று தொடங்கும் இந்தப் பாடல் போகப்போகஎல்லாருக்கும் பிடிக்கக்கூடிய ஒரு நல்ல மெலோடி என்றுதான் சொல்லமுடியும் .
... 4/5


படத்தில் வேலை செய்த அனைவருக்கும் படம் வெற்றியடைய வாழ்துக்குக்கள் ...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நஞ்சுபுரம் --- இசை அலசல்

நஞ்சுபுரம் ஒரு நல்ல படமாக வரும் என்று நான் மிகவும் எதிர் பார்க்கிறேன் ஏனெனில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சன் பிக்சர்ஸ் ஹன்சேன் சக்சேனா இந்தப் படத்தை நான் ஆறு முறை பார்த்திருக்கிறேன்அந்தவுக்கு இது ஒரு நல்ல படம் என்று சொல்லியிருக்கிறார் அது அனைவருக்கும் படம் வெளி வந்த பின்னால் தான் தெரியும் ...இதப் படத்தின்இயக்குனர் ஒரு புது முக இயக்குனர் . படத்தின் தயாரிப்பாளர் , ஹீரோ மற்றும் இசையமைப்பாளர் ஆகிய அனைத்தும் ஒருவரே அவர்தான் ராகவ் இவர்தான் படத்தின் ஹீரோ ஆவர் .....இந்தப் படத்தை ராமநாராயணன் தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ...

படத்தின் பாடல்களை பற்றி ....

1) The Warriors Rap --- இந்தப் பாடல் நமது யோகிபி பாடிய தமிழ் வல்லவன் ஆல்பம் அந்த சாயலிலேயே உள்ளது .அந்தப் பாடல் நாம் அனைவரையும் கவந்ததாலோ என்னவோ இந்தப் பாடல் எடுபடாது என்று தான் எனக்கு தோன்றுகிறது.
... 3/5

2)Thelaga Kottu Thamma --- இது நல்ல மெலோடி பாடல் ஆகும் கேட்பதற்கு நன்றாக உள்ளது அனைவருக்கும் பிடிக்கும்.
... 4/5


3)Oorula Unakkoru Maedai --- இந்தப் பாடல் கேட்பதற்கு நன்றாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் புதிதாக முயற்சி செய்திருக்கிறார்கள்.
... 4/5


4)Yavarum --- பாடல் ஒரு மெலோடி பாடல் ஆகும் ஓகே என்றுதான் சொல்லமுடியும் .
... 2/5


5) Anbae Unna --- இந்தப் பாடல் எதோ ஒரு பாடலின் அப்பட்டமான தாக்கம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது நீங்களே கேட்டுவிட்டு சொல்லுங்கள். ஆனால் நல்ல மெலோடி கலந்த பாஸ்ட் பீட் பாடல் ஆகும் .
... 3/5


6) Ennatuma Vaanathula --- பாடல் சுமாராக உள்ளது நண்பர்களே .
... 2/5

படத்தில் வேலை செய்த அனைவருக்கும் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ..........................

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எஸ்டர் டேய் --- விமர்சனம்


ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவனுடைய வாழ் இறுதி நாளை தீர்மானிக்கின்ற ஒரே ஒரு நோய் H.I.V வைரஸ் ஆகத்தான் இருக்கமுடியும் எனினும் இக்காலத்தில் அதற்க்கு முழுமையாக மருந்துகண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று சொல்கிறார்கள் அது எந்தளவுக்கு உண்மை என்று இதுவரை அறியப்படவில்லை எவராலும் ..... ஒரு வூரில் ஒருவருக்கு H.I.V இருப்பது அந்த வூர் மக்களுக்கு தெரிய வந்தால் அவருடன் பழகுவதையோஅல்லது பேசுவதையோ நிறுத்தி விடுகிறார்கள். அது மிகவும் H.I.V யை விடகொடுமையான விசயமாகும் அது அவர்களின் வாழ் இறுதி நாளை இன்னமும் குறைக்க வாய்ப்பிருக்கிறது என்பதுதான் உண்மை . யாரும் தயவு செய்துஅப்படி செய்யாதீர்கள் அதுவே உங்களுடைய நிலைமை என்றால்யோசித்துப்பாருங்கள் நண்பர்களே ......
படத்தை பற்றி ....
எந்த ஒரு வசதியும் இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் ஒருகுடும்பத்தின் கதைதான் இந்த படம் தாயும் தன மகளும் அந்த கிரமத்தில்வசிக்கிறார்கள் அவளுடைய கணவன் வேறொரு இடத்தில வேலை செய்துகொண்டிருக்கிறான் ... அந்தப் பெண்ணுக்கு ஆரம்பத்திலிருந்தே அதாவது குழந்தைபிறந்த ஓரிரு வருடத்திலேயே உடல் நலக் குறைவு ஏற்படுகிறது.அந்தகிராமத்திலிருந்து சில மையில் தூரம் சென்றால் தான் மருத்துவமனையை அடைய முடியும் அதுவும் அங்கு வாரத்தில் ஒரு நாள் தான் மருத்துவர் இருப்பார் இவளும்இரண்டு வாரங்கள் செல்லுவாள் ஆனால் மருத்துவரை அணுக முடியாமல்போகிறது ஏனெனில் அருகில் அணைத்து வூர்களுக்கும் அந்த ஒரேஒருமருத்துவமனை மட்டும் தான் அவளவு ஆட்கள் அங்கே மருத்துவரை சந்திக்ககாத்திருப்பார்கள் என்பதை நீங்கள் படம் பார்க்கும் பொது தான் உணர்வீர்கள் ... ஒரு நாள்மருத்துவரை சந்தித்து அவளுக்கு H.I.V இருப்பதை தெரிந்து கொள்வாள் ஆனால் அவளுடைய ஒரேஒரு ஆசை தன குழந்தை பள்ளிக்குச் செல்லும் வரையாவது தான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் அவ்வாரே மிக அருமையா படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் டாரல் ரூட் என்பவர் ....... இது ஒரு மிகச்சிறந்தபடமாகும் ....

இந்தப் படத்தின் தாக்கம் நம் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியாது ஆனால் தமிழ் இயக்குனர்சாமி என்பவரை அனைவருக்கும் தெரியும் அவருடைய முதல் படமான மிருகம்படத்தில் இந்தப் படத்தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை இந்தப் படத்தைநீகள் பார்க்கும் போது புரிந்து கொள்ளவீர்கள் ....... ஒரு மொழி படத்தின் தாக்கம்மற்றொரு மொழி படத்தில் இருக்கலாம் ஆனால் அதுவே அந்தப் படைப்பின்அப்பட்டமான மறுபதிப்பாக இருக்கக்குடாது என்று நான் இங்கே சொல்லவிரும்பிகிறேன் ......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Search This Blog

vks. Powered by Blogger.

Followers