காவலன் விஜயின் 51 வது படமாகும். இதுதான் விஜயின் அடுத்த பயணத்திற்கான தொடக்கம் என்று சொல்லவதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் மற்றும் நடிக்க இருக்கும் படங்களின் வரிசையை பார்த்தால் நீங்களும் புரிந்து கொள்வீர்கள். வரிசை உங்களுக்காக
வேலாயுதம் --- ஜெயம் ராஜா
நண்பன் --- ஷங்கர்
பகலவன் --- சீமான்
பொன்னியின் செல்வன் --- மணிரத்னம்
கண்ணபிரான் --- அமீர்
மற்றும் யாவரும் நலம் படத்தின் இயக்குனர் விக்ரம் குமார், களவானி படத்தின் இயக்குனர் சற்குணம் ஆகிய இருவரின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
இவற்றை எல்லாம் பார்க்கும் போது தனது அடுத்த பயணத்தில் இளையதளபதி நன்றாக பயணம் செய்வார் என்றுதான் அவருடைய ரசிகர்கள் எதிர்பாத்து காத்துகொண்டிருக்கிறார்கள்.
காவலன் படம் சில நண்பர்கள் பார்த்து விட்டு படம் சரியில்லை என்று சொன்னார்கள், அதை என்னால் ஏற்றிக்கொள்ள முடியாது, ஏனெனில் ஒரு படத்தை பார்க்கும் போது அதுவும் மாஸ் ஹீரோவான விஜய் படங்களை பார்க்கும் போது அவர் எவ்வாறு நடித்திருக்கிறார் மற்றும் எந்தவிதமான ரோலில் நடித்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டுமே தவிர, முந்தய விஜய் படங்களை மனதிற்குள் கொண்டுவரக் கூடாது. படம் பார்க்கும் போது ஒரு நல்ல காதலின் உணர்வைக் கொடுக்கும் என்பதுதான் உண்மை. என்னடா இவ்வளவு நாள் கழித்து படத்திற்கு விமர்சனம் எழுதுறான் என்று நினைக்க வேண்டாம். நான் இங்கே சொல்ல வந்தது காவலன் மூலம் விஜயின் அடுத்த பயணம் தொடங்கிவிட்டது என்பதைத்தான். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் அதில் தொடக்கத்திற்கான முதல் படத்தை சில வரிகள் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
படம் பார்க்கும் போது, நம் தாய் மொழியில் படித்தால் இவ்வளவு இன்னல்களுக்கு ஆளாக வேண்டுமா என்று ஒவ்வொரு தமிழனுடைய மனதிலும் தோன்றியிருக்கும். அதேபோல் நானும் படத்தை பார்க்கும் போது என்மனதிலும் தோன்றியது.படத்தை இயக்கியிருப்பது பாலு மகேந்திராவின் சிஷ்யனான ராம் என்பவர்தான்.
படம் மக்களிடத்தில் ஒரு நல்ல செல்வாக்கை பெரும் என்றும் அதே சமயம் லாபத்தை சம்பாதிக்கும் என்றும் இயக்குனர் நினைத்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு நல்ல திரைக் காவியத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்து அவரால் நிறுத்தியிருக்க முடியாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை ஆகும். இப்படிப்பட்ட நல்ல படங்களை வரவேற்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு சினிமாக்காரனின் மறக்க முடியாத ஆசையில் ஒன்று. எனவே மக்கள் அதை புரிந்து கொண்டால் தான், திரைக் காவியத்தை தன வாழ்வில் ஒரு அங்கமாக அமர்த்தி தவறானவற்றை படங்களின் மூலம் புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் உண்மை.
பாலு மகேந்திராவின் இன்னும் ஒரு சிஷ்யரான நாம் அனைவருக்கும் தெரிந்த வெற்றிமாறன் அவர்கள், இரண்டு நல்ல காவியங்களை படைத்திருக்கிறார். அவை உங்களுக்காக.. பொல்லாதவன் மற்றும் ஆடுகளம்.
எல்லா சிஷ்யர்களும் குருவைப் போலவே இருந்தால் சினிமாவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.
படத்தில் +2வில் நல்ல மதிப்பெண் பெற்று தன் தாய் மொழி தமிழை படிக்க கல்லூரியில் சேர்ந்தால் அங்கே உள்ள வாத்தியாரும் இந்த மார்க்குக்கு நல்ல enggineering college கிடைக்குமே என்று அவனுடைய ஆசையில் பின்னடைவை ஏற்ப்படுத்துவது எவ்வளவு பெரிய ஒரு தவறான விசயமாகும் அதை தெளிவாக அவன் பதில் மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
தமிழ் படித்து ஒரு பள்ளியில் மூன்று வருடங்களுக்கு மேல் வேலை செய்து வந்தாலும் அவனுடைய மாத வருமானம் 3000-5000 வரை தான் ஆனால் கணிப்பொறியில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டும் ஒரே வருடத்தில் அவர்களுடைய வருமானம் தேவையை விட அதிகமாக கிடைக்கிறது என்பதுதான் உண்மை என்று காட்சிகளில் தெளிவு படுத்தியிருக்கிறார். இன்னும் ஒன்று சொல்ல போனால் அவர்கள் செய்யும் பந்தாவிர்க்கு எல்லையே கிடையாது. படத்தை பார்த்து அனைவரும் இன்னும் சில விசயங்களை தெரிந்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் பேசினால் என்ன தவறு இருக்கிறது. தமிழ் மொழி மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்தே இருக்கிறது என்பதை எவராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாத ஒன்று என்பதை நான் அனைவருக்கும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

சாது மிரண்டா என்ற தமிழ் படம் ஏன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அலசும்போது எனக்கு தெரிந்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
படத்தில் சரியான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாததும்...
படத்தை பற்றி சரியான விமர்சங்கள் வெளிவராததும்...
படத்திற்கு சரியான விளம்பரங்கள் இல்லாததும்...
படத்தில் புது முகங்கள் தான் நடித்திருக்கிறார்கள் என்று நினைத்தார்களோ என்னவோ .... மக்கள்...
படத்தில் நடித்தவர்கள் அனைவரும் வெளி உலகிற்கு தெரியாத ஏற்கனவே ஓரிரு படத்தில் நடித்தவர்கள் தான்...
இவை அனைத்தும்.........
படத்தின் திரைக்கதையை மிகவும் நுட்பமாக அமைத்திருக்கிறார் இயக்குனர். பொதுவாக சித்திக் படமென்றால் குடும்ப அனுதாபங்கள் அதிகாமாக இருக்கும் என்றாலும் கதையுடன் தொடர்புடையதாகத் தான் இருக்கும். படம் பார்க்கும் போது சரியாக கவனிக்காவிட்டால் படத்தில் யார்யார் என்ன கதாப் பாத்திரங்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அவ்வளவு ஒரு நுணுக்கமான திரைக்கதை. படத்தின் கதையை இங்கே நான் குறிப்பிட்டுச் சொன்னால் புரியாது பார்த்தால்தான் புரியும்.
படத்தை இயக்கியவர் சித்திக். அனைவருக்கும் தெரியும் இவரை... சில மாதங்களுக்கு முன்பு இளையதபதி நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காவலன் படத்தை இயக்கியவரும் இவரே... தமிழில் மொத்தம் நான்கு படங்கள் தான் இயக்கியிருக்கிறார். சித்திக் ஒரு நல்ல படைப்பாளி என்று சொல்லலாம் ஏனெனில் எல்லா படங்களும் அவருடைய சொந்த கதை மற்றும் திரைக்கதைதான் என்பதாகும்.
![]()
இந்தப் படம் பாண்டியராஜன் அவர்களின் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்து வெள்ளிவிழா கண்ட படம். படத்தை இப்போது வெளியிட்டாலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடக்கூடிய, எல்லாவிதமான மக்களையும் ரசிக்க வைக்கிற அளவுக்கு காமடியும், கதையை எதாத்தமாக சொல்லியிருக்கும் விதமும், கூடவே இசைஞானி இளையராஜாவின் இசையும் சேர்த்து கொண்டு படம் பார்ப்பவர்களை இப்போதும் பிரமிக்கவைக்கிறது.இந்தப் படத்தில் பாண்டியன், பாடியராஜன் , ரேவதி , சீதா, வி.கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். படத்தைப் பற்றி எழுத ஒரு உண்மையான காரணம் நான் பலமுறை படத்தை பார்த்தும் ஒரு இடங்களில் கூட திரைக்கதையில் சளிப்பு ஏற்ப்படவில்லை என்ற உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொண்டால்தான், நமக்கு பின்னால் வரும் தலைமுறையினருக்கும் நீங்களும் பகிர்ந்து கொள்வீர்கள். இந்த மாதிரி படம் இதுவரை வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆதலால் இந்தப் படத்தை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். படத்தை நீங்கள் இணையதளத்தில் பார்க்க வேண்டுமானால் தயவுசெய்து இதை கிளிக் செய்யவும்
உங்களுக்காக DVD Quality யில்
http://www.rajtamil.com/2009/08/aan-paavam1985.html
படத்தை நீங்கள் ஒரு தடவையாவது பார்த்திருப்பீர்கள். திரும்ப திரும்ப பார்க்க ஆசைப்படுபவர்களுக்காக இந்த இணையதளத்தை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்தப் படம் நாம் அனைவரும் ஒரு உலக சினிமாவை பார்க்க வேண்டுமானால் முதலில் நாம் செய்வது IMDB (Internet Movie Data Base) என்ற இணையதளத்தில் அந்தப் படத்திற்கு எவ்வளவு ரேட்டிங் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுவோம். அந்த இணையதளத்தில் ஆண் பாவம் படத்திற்கு கொடுத்த ரேட்டிங் இதோ உங்களுக்காக
IMDB Rating : 8.5/10
எனவே உலக சினிமாக்களை விமர்சனம் செய்கின்ற இந்த இணையதளம் நம் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த அதிகமான இந்தப் படத்துக்காகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.உண்மையான ஒரு விஷத்தை நான் சொல்கிறேன் படத்தின் கதையை நான் ஒருவரிகூட சொல்லவில்லை, ஏனெனில் படத்தை வரும் தலைமுறையினரும் பார்க்க வேண்டும் என்பதற்காக... எனவே நம் தமிழ் சினிமா 1985 லேயே உலகமே திரும்பி பார்க்கக்கூடிய ஒரு திரைக்கூடமாக மாற்றப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் நம் ஆட்கள் தமிழ் சினிமா உலக அளவிற்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பது ஒரு அப்பட்டமான தவறான கருத்தாகும். இதை ஒவ்வொரு திரைப்படத்துறையினரும் புரிந்து கொள்ள வேண்டும். படத்தைப் பற்றி இன்னும் ஏதாவது சுவாரசியமான சிந்தனைகள் வந்தால் இந்தப் பதிவிலேயே பதிவு செய்கிறேன். படித்த நண்பர்களுக்கு நன்றிகள்.....





