
நம் பொது வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை தான் இந்தப் படத்திலும்காட்டியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஆண்டன் கார்பிஜின் என்பவர் .. இப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருதை பெற்ற மிகமுக்கியமான படம் ஆகும் ... ஒரு ஆணோ அல்லது பெண்ணோ திருமணத்திற்குபிறகு எந்த ஒரு பிரச்சனையும் வராத வரை சந்தோசமாக தான் வாழ்கிறார்கள் ஆனால் தங்கள் வாழ்க்கையில் அதாவது கணவன் மனைவி இடையே சின்னசின்ன பிரச்சனைகள் வரும் போது அதை இருவரும் சேர்ந்து தான் பேசிதீர்த்துக்கொள்ள வேண்டும் அந்த பிரச்சனைக்கு யாரோ ஒருவரின் மரணம் தீர்வுஅல்ல .. என்பதை சொல்லும் படம் தான் இது .....
இந்தப் படம் 1970 -இல் அனைத்து ராக் இசை ரசிகர்களையும் கட்டிபோட்ட அயன்கர்டிஸ் என்பவரின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம் ....
அயன் கர்டிஸ் வீட்டை விட்டு தனிமையில் வாழ்கிறான் அவனுக்கு ஒரேஆறுதல் அவனுடைய காதலி மட்டும் தான் அவளை நினைத்து பாடல்களையும்கவிதைகளையும் எழுதிக் குவிக்கிறான் .. ஒரு பாடலை மேடையில் பாடும் போதுநிறைய ரசிகர்களை கட்டிப் போடுகிறது அவன் இவ்வாறே முனேறிச்செல்கிறான் தன காதலியையும் மணக்கிறான் .. இவர்கள் வாழ்க்கை நன்றாகபோய்க்கொண்டிருக்கிறது அப்போது இனொரு பெண்ணின் தொடர்புகிடைக்கிறது இவளையும் காதலிக்க ஆரம்பிக்கிறான் கர்டிஸ் .... படம் நன்றாகபோய்க்கொண்டிருக்கிறது படத்தை பாருங்கள் .....

ஜப்பானில் 11.03.2011 அன்று மிகப்பெரிய சுனாமி தாக்கி பல்லாயிரக்கனக்கான உயிர்களை பலி கொடுத்தது ...எனினும் மீதமுள்ள மக்களை காப்பாற்ற நாம்அனைவரும் இறைவனை வேண்டி பிராத்தனை செய்து கொள்வோம் ... அதோடுவிடாமல் கிலே உள்ள இணையதளத்தில் சென்று உங்களால் முடிந்த உதவியைசெய்யுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் ...
http://www.globalgiving.org/
http://www.youtube.com/watch?v=e-A0NDsPcZY

சிங்கத்தை புலியும் புலி சிங்கத்தையும் அடிக்க முடியாது என்பதை இந்தப் படம்மூலம் இயக்குனர் நிருபித்திருக்கிறார் என்று அனைவரும் நினைக்கலாம்அதுதான் இந்தப்படத்தில் எடுபடவில்லை ...ஜீவா எனக்கு பிடித்த நடிகர்களில்ஒருவர் ஆவர் இவர் போய் ஏன்தான் இப்படிப்பட்ட கதைகளில் நடிக்கிறார் என்றுஎனக்கு புரியவில்லை... எல்லா இயக்குனர்களும் ஜீவாவை அவர்களதுஇயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிற ஒரு ஆள்தான் நம்ம ஜீவா ....... ஜீவாவை நல்லநல்ல ரோல்களில் பார்த்த நம் மக்களுக்கு ஒருமாறுதலுக்காக இந்தப் படத்தில் நடித்தாரோ என்னவோ எனக்கு தெரியாது ... ஜீவாவுக்கு சினிமா ரசிகர்களின் வேண்டுகோள் என்னவெனில் நீங்கள் ஒரு மாறுதலுக்காக இப்படிப்பட்ட பட்ட படங்களில் நடிக்கிறீர்கள் அது தவறில்லை ஆனால் ஒரு கமெர்சியல் கதையை தேர்வு செய்யும் போது சில எதார்த்தங்கள் மாறாமல் கதையை தேர்வு செய்யுங்கள் இதுதான் சினிமா ரசிகர்களின்வேண்டுகோள் ஆகும் ....
அச்சில் வார்த்ததுபோல ஒன்றுபோல இருக்கும் இரட்டையர்கள். அவர்களில் ஒருவன் நல்லவன், மற்றவன் கெட்டவன். சாமர்த்தியமான இந்தக் கெட்டவனை நல்லவன் எப்படி வெற்றிகொள்கிறான் என்பதே கதை.மணிசர்மா இசையில் பாடல்கள் சுமார் ... பொதுவாக சந்தானத்தின்காமெடி சிரிக்கும் படியாக உள்ளன ...தப்பு செய்தவனுக்கு தண்டனை தானாக தேடிவரும் என்பதுதான் உண்மை ...
சிங்கம் புலி -- எது எதையும் வேட்டையாட வில்லை

இந்தப் படம் பற்றி சொல்வதற்கு முன்பு பணம் சம்பாதிக்க வெளி நாடு சென்றால்தான் முடியும் என்று எப்படி நம் மக்களுக்கு தோன்றியது என்பதை ஆராய்ந்துஇந்தப் படத்தை இயக்கி இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது எனக்குத்தெரியும் இது உங்களுக்கு புரியாது என்று சற்று நீங்களே யோசித்துப்பாருங்கள்அப்போது உங்களுக்கு புரியும் ...இந்தப் படம் வெளி நாட்டில் செட்டில் ஆகிவேலை செய்யும் போது அடுத்து நம் ஆட்களுக்கு தோன்றுவது கல்யாணம் .... கல்யாணம் பண்ணி அங்கேயே செட்டில் ஆகி சிலவருடங்கள் கழித்து
நம் நாட்டிற்க்கு வரும் போது குழந்தைகளுடன் தான் வருவார்கள் ..அம்மா அப்பாஇருவரும் இந்தியன் கல்சரை மறக்க மாட்டார்கள் எனினும் அவர்களுடையபிள்ளைகள் பிறந்தது முதல் அங்கேயே வளர்ந்ததால் அவர்களுக்கு நம்முடைய கல்சர் பற்றி எதுவும் தெரியாது அப்போது அவர்கள் இந்தியாவிற்கு தன்சொந்தபந்தங்களை பார்க்க வரும் போது எப்படி அவர்கள் நம்முடைய கல்சரைமதிக்க வேண்டும் என்று நினைக்க முடியும் அதைப்பற்றி அவர்களிடம்பேசக்குடாது என்பதுதான் உண்மை ....
இதை ஒரு கருவாகக் கொண்டுதான் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார் இந்தஅனைவருக்கும் தெரிந்த இயக்குனர் தீபா மேத்தா அவர்கள் ... இவர் இந்தியாவின்ஒரு புரட்சிகரமான இயக்குனர் ஆவார் ... இந்தப் படம் நான் பார்க்கும் போது என் மனதை மிகவும் உருக்கியது என்பதை நான் மிக உருக்கமாக சொல்கிறேன் ,,,

ஹெயமத் இந்தப் படம் பதினாறு மணி நேரம் ஓடக்கூடிய ஒரு பெரிய படம் என்றும் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்திய படமும் ஆகும் ...
இந்தப் படம் 1919 இல் தொடங்கி 1980 இல் முடிவது போல எடுக்கப் பட்டுள்ள ஒருபெரிய படமாகும் ... இதை நான் ஒரு நாள் படித்தேன் ஆனால் இன்னும் நான்இந்தப் படத்தை பார்கவில்லை ... நான் படிக்கும் போது எனக்கு மிகவும்பிடித்திருந்தது ஆதலால் அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளஆசைப்படுகிறேன் ...
அப்படி என்னதான் நூதனமான விஷயத்தை அதில் சொல்லிட்டான். ஒரு கிராமத்தில் ஒரு வீடு. அந்த வீட்டில் இருக்கிறவர்கள் பிரிதல், கூடுதல், வம்ஸம் விருத்தியாகிறது. குக்கிராமம் ஊராகி நாடு வல்லரசாகி போர் புரிந்து சுடுகாடாகி திரும்ப மறுபிறப்பெடுத்து தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி தனக்கும் இடைப்பட்ட வீழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பதாக மீண்டெழுந்து இவ்வளவுக்கும் இடையில் இளம் பெண்ணாக இருந்த ஒருத்தி காதலித்து குழந்தைகள் பெற்று கணவனைப் பிரிந்து வேறொருவனோடும் குழந்தை பெற்று அவனையும் விபத்தில் இழந்து இருபது வருடம் கழித்து வீடு திரும்பிய கணவனை வேறு யாரோவாக பாவித்து முதுமையடைந்து இறக்கிறாள் .
படத்தலைப்பிற்கு அர்த்தம் என்னவோ? அதுவா வேற ஒன்னுமில்லே 'வீடு' என்று பொருள்.
கதை 1919ல் முதல் உலகப் போரிலிருந்து சிமோன் வீடு திரும்புவதில் தொடங்குகிறது.
கதையின் நாயகி மட்டும் 20 லிருந்து 80 வயதுவரை ஒரே பெண்.
முழுமையாக உருப்பெற்று வந்திருக்கும் பாத்திரங்கள் மட்டுமே முப்பதைத் தாண்டும். கோட்டோவியமாய் நான்கு கிறுக்கலில் எழுந்து நிற்பவை மட்டுமே 50 தைத்தாண்டும். ஆனால் சிறு குழப்பமும் இருக்காது, யார் யார் என்னென்னவாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்னவாக ஆகிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக இருக்கும். பதட்டத்துடன் குறிப்பேட்டைப் புரட்டத் தேவையில்லை.





