Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

ஹெயமத் (தமிழில் வீடு )-- படம் அலசல்
















ஹெயமத் இந்தப் படம் பதினாறு மணி நேரம் ஓடக்கூடிய ஒரு பெரிய படம் என்றும் பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்திய படமும் ஆகும் ...
இந்தப் படம் 1919 இல் தொடங்கி 1980 இல் முடிவது போல எடுக்கப் பட்டுள்ள ஒருபெரிய படமாகும் ... இதை நான் ஒரு நாள் படித்தேன் ஆனால் இன்னும் நான்இந்தப் படத்தை பார்கவில்லை ... நான் படிக்கும் போது எனக்கு மிகவும்பிடித்திருந்தது ஆதலால் அதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளஆசைப்படுகிறேன் ...

அப்படி என்னதான் நூதனமான விஷயத்தை அதில் சொல்லிட்டான். ஒரு கிராமத்தில் ஒரு வீடு. அந்த வீட்டில் இருக்கிறவர்கள் பிரிதல், கூடுதல், வம்ஸம் விருத்தியாகிறது. குக்கிராமம் ஊராகி நாடு வல்லரசாகி போர் புரிந்து சுடுகாடாகி திரும்ப மறுபிறப்பெடுத்து தனது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி தனக்கும் இடைப்பட்ட வீழ்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பதாக மீண்டெழுந்து இவ்வளவுக்கும் இடையில் இளம் பெண்ணாக இருந்த ஒருத்தி காதலித்து குழந்தைகள் பெற்று கணவனைப் பிரிந்து வேறொருவனோடும் குழந்தை பெற்று அவனையும் விபத்தில் இழந்து இருபது வருடம் கழித்து வீடு திரும்பிய கணவனை வேறு யாரோவாக பாவித்து முதுமையடைந்து இறக்கிறாள் .
படத்தலைப்பிற்கு அர்த்தம் என்னவோ? அதுவா வேற ஒன்னுமில்லே 'வீடு' என்று பொருள்.
கதை 1919ல் முதல் உலகப் போரிலிருந்து சிமோன் வீடு திரும்புவதில் தொடங்குகிறது.
கதையின் நாயகி மட்டும் 20 லிருந்து 80 வயதுவரை ஒரே பெண்.
முழுமையாக உருப்பெற்று வந்திருக்கும் பாத்திரங்கள் மட்டுமே முப்பதைத் தாண்டும். கோட்டோவியமாய் நான்கு கிறுக்கலில் எழுந்து நிற்பவை மட்டுமே 50 தைத்தாண்டும். ஆனால் சிறு குழப்பமும் இருக்காது, யார் யார் என்னென்னவாக இருந்தார்கள், இருக்கிறார்கள் என்னவாக ஆகிறார்கள் என்பதெல்லாம் தெளிவாக இருக்கும். பதட்டத்துடன் குறிப்பேட்டைப் புரட்டத் தேவையில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers