Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

தமிழக அச்சுக் கலையின் ஆரம்பம் எப்போது ...


ஹென்றிக் என்ரி கியூஸ் எனற ஒரு பாதிரியாரால் 1578 -இல் நெல்லை மாவட்டத்தில் புன்னைக் காயல் என்ற இடத்தில தொடங்கப்பட்ட அச்சகம் தான் முதல் தமிழ் அச்சகம் ஆகும்.எனவே இந்த ஹென்றி என்பவர்தான் தமிழ் அச்சுக்கலையின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர் தனது இருபத்து ஒன்பதாவது வயதில் தூத்துக்குடிக்கு வந்தவர் தமிழ் கற்று குருக்கள் மடம் நடத்தினார். பக்தர்களுக்கு தமிழிலேயே பாவ மன்னிப்பு வழங்கிய முதல் பாதிரியார் இவர்தான். நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துவ மதத்துக்கு ஒரு இடத்தை பெறச்செய்த சவேரியாரின் நெருங்கிய நண்பராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹென்றி என்பவர், அனைவரும் பிரச்சாரத்துக்கு தமிழ்நூல்களை தான் பயபடுத்தவேண்டும் என்று சவேரியார் முதற்கொண்டு அனவைவருக்கும் அன்புக் கட்டளையாக கூறினார் என்பது உண்மை ஆகும். "தம்பிரான் வணக்கம் " என்ற சவேரியாரின் நூலை மொழி பெயர்த்தவர் ஹென்றி என்பவரே...இவருடன் சேர்ந்து ஜோ .டி. பாரியா மற்றும் கொன்சால்வசு என்ற பாதிரியார்களும் பணி புரிந்தனர்.இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள். குறிப்பாக ஜோ . டி.பாரியா என்பவர் தமிழ் எழுத்துக்குகளை அதிகமாக செதுக்கினார். 1578 ல் "ஞானோபதேசம்" என்ற நூல் அச்சிடப்பட்டது. அடுத்து 1579 ல் இரண்டு நூல்கள் வெளியாயின அவை மீண்டும் "தம்பிரான் வணக்கம் " மற்றும் "பாவ சங்கீர்த்தனம் " இவை இரண்டும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் உள்ள போட்லியன் நூலகத்தில் உள்ளது.இநத நூல்களை எல்லாம் எழுதியவர் ஹென்றிக் என்பவர்தான். தமிழக அச்சுக் கலையின் தந்தையான இவர் தனது என்பதாவது வயதில் மரணமடைந்தார். அவரது விருப்பப்படி தூத்துக்குடியில் உள்ள பணிமாத ஆலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. .....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers