இயக்குனர் சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீ பாலாஜி என்பவர்தான் இந்தப் படத்தை இயக்கியவர். நான் முன்னாடியே இந்தப் படத்தின் பாடல்கள் பற்றி அலசும் போது நான் ஒரு விஷத்தை சொல்லி இருந்தேன் அதற்க்கு என்னை முதலில் நீங்கள் மன்னித்து விடுங்கள்.(அது குள்ளநரிகள் திட்டம் தீட்டினால் அது வெற்றி தான் என்று நான் சொல்லியிருப்பேன் அதற்காகத்தான் இந்த மன்னிப்பு). படத்தின் முதல் பாதியில் மட்டும் ஹீரோயினை நடிக்க வைத்திருக்கிறார்கள். இராண்டாம் பாதியில் ஹீரோயினை பார்க்கவே முடியவில்லை. இன்னமும் இந்த இயக்குனர் தமிழ் சினிமாவின் தொடர் பார்முலாவை விட்டு வெளியே வரவில்லை என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் என்னால் நம்பமுடியவில்லை ஏனெனில் இந்த இயக்குனர் படத்துக்கு படம் ஏதாவது பண்ண வேண்டும் என்று நினைக்கக் கூடிய சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியது என்பதை ....... நான் பார்த்த நிறைய படங்களில், போலீஸ் தப்பு பண்ணினால் தான் அந்தப் படம் நல்ல வருமா என்ன... அதை ஒரு கருவாக எடுத்துக் கொண்டு, ஏன் மக்களின் மனதில் போலிசை பற்றி ஒரு தவறான என்னத்தை உண்டுபண்ணுகிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவு செய்து வருகால இயக்குனர்களே இதை மாற்றிக் காட்டுங்கள். படத்தில் விழிகளிலே என்ற பாடல் இனிமையாக உள்ளது மற்றும் குள்ளநரிக் கூட்டம் என்ற பாடல் ஓகே என்றுதான் சொல்லமுடியும். இந்த விமர்சனத்தை படித்து விட்டும் நீங்கள் படம் பார்பீர்களானால் அது நீங்கள் சினிமா மீது வைத்திருக்கும் ஒரு மரியாதையைத்தான் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ........
0 comments:
Post a Comment