பிரின்சஸ் அரோரா என்ற இந்தப் பெயருக்கு " ஒரு அழகான தேவதையின் தூக்கநிலை " எனற ஒரு அற்ப்புதமான நல்ல பொருள் விரிவை தரக்கூடிய ஒன்றாகும். இந்தப் தலைப்பிற்கு தகுந்தாற்போல் இந்தப் படமும் ஒரு நல்ல இடத்தை, தாய்மார்களின் மனதில் சில தவறுகளுக்கு அவர்கள் என்ன நினைப்பார்களோஅதைத் தான் இந்தப் படம் செய்திருக்கிறது என்றும் படத்தின் இயக்குனர் செய்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.
இந்தப் படம் குழந்தைகளுக்கான குறிப்பாக பெண் குழந்தைகள் எப்படியெல்லாம் அவதிக்குள்ளாகிறார்கள் என்பதை சொல்லும் படம் என்று சொல்வதை விட ஒரு ஆறுவயதுக் பெண் குழந்தை பள்ளி முடிந்தவுடன் தன் தாய் வந்து தன்னை விட்டிற்கு அழைத்துச் செல்வாள் என்று காத்திருக்கிறாள். வெகுநேரம் ஆகியும் தன் தாய் வராததால் அந்தக் குழந்தை தானாகவே ஒரு கால்டாக்ஸ்சியை பிடித்து விட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறாள். அபோதான் அவள் தன்னிடம் உள்ள பணத்தை எடுத்துப் பார்க்கும் போது கொஞ்சம் குறைவாக உள்ளது(வண்டி வாடகைக்கு ). அதை அந்தக் குழந்தை அந்த வண்டியின் ஓட்டுனரிடம் கூறும்போது அவர் என்ன செய்திருக்க வேண்டும் ( ஒரு குழந்தை அல்லவா அவள், அவளை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார் ஒவ்வொரு குழந்தையையும் தன் குழந்தையைப் போல பாதுகாக்கவேண்டும் அல்லவா ? ஓட்டுனர் அவ்வாறு செய்யாததால் அந்தப் குழந்தை சில கயவர்களின் கையில் சிக்கி கற்பழிக்கப்பட்டு நிவானமாக்கப்பட்டு கொலை செய்து குப்பையில் எரிந்து விடுகிறார்கள் ) அந்த ஓட்டுனர் அந்தக் குழந்தையை தன் குழந்தை போல பாவித்து வீடு வரை கொண்டுசேர்த்து அவள் தாயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்ல. இதே அவருடைய குழந்தையாக இருதால் இவ்வாறு செய்திருப்பாரா என்ற கேள்வியை இங்கே நான் கேட்டால் தான் எல்லாரும் யோசித்துப் பார்ப்பார்கள்.
இவ்வாறு தான் குழந்தை நிவானமாக்கப்பட்டு கொள்ளப்பட்டு குப்பையில் எரிந்தததை பார்த்த அவளின் தாய் அவர்களை பழிவாங்க வேண்டுமென்று நினைக்கிறாள், இதுதான் ஒவ்வொரு தாயின் ஒரு ஆதங்க ஆசையாகும் ஆனால் எத்தனை தாய்மார்கள் உண்மையாக இந்த ஆதங்க ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதை கைவிட்டு எண்ணிவிடலாம் என்பதுதான் உண்மை. ஆதலால் இந்தப் படத்தில் அந்தக் குழந்தையின் தாய் செய்ததை எந்தெந்த தாய் செய்கிறாளோ அவர்களுக்கெல்லாம் எல்லாவிதமான மக்களும் ஆதரவு அளிக்கவேண்டும் என்பதுதான் இளைய சமுதாயத்தின் கோரிக்கை ஆகும் .
படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் கதை சொல்லும் விதம் மிக மிக நன்றாக உள்ளது. இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். எனவே தமிழ் சினிமாவிலும் இப்படிப்பட்ட படங்கள் உருவாகும் நிலை வெகு தூரத்தில் இல்லை. அப்படிப்பட்ட படங்கள் வரும் போது அதைமக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இயக்குனர் மற்றும் உதவிஇயக்குனர்களின் ஆசையும் அன்பான கோரிக்கையும் ஆகும்.
படத்தை அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்......... விமர்சனங்களை சொல்லுங்கள்
பிரின்சஸ் அரோரா --- விமர்சனம்
3:29 am |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment