பேசு இந்தப் படம் ஒரு புதுமுக இயக்குனரின் படம் ஆகும் ஆனால் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து ஒரு பாடல் பாடவும் செய்திருக்கிறார், அந்தப் பாடலை படத்தின் இயக்குனரே எழுதியிருக்கிறார் என்பதை நான் இங்கே சொல்ல வேண்டும். மொத்தம் படத்தில் ஐந்து பாடல்கள், மீதி உள்ள நான்கு பாடல்களையும் சிநேகன் அவர்கள் எழுதியுள்ளார். ஒரு நல்ல பாடல் ஆசிரியரும் மற்றும் நல்ல இசையமைப்பாளரும் சேரும் போது பாடல்கள் நன்றாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போல பாடல் ஓரளவுக்கு கேட்கும் படியாகத்தான் உள்ளது என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். படம் வெற்றியடைய படத்தில் வேலை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தில் இயக்குனர் பெயர் சிரில் என்பதாகும். இதில் நடித்திருக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் புதுமுகம் தான், அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.இந்தப் படத்தில் அனைத்து பாடல்களுமே மெலோடியாகதான் உள்ளது. பாடல்கள் கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது நண்பர்களே, நீங்களும் கேட்டு விட்டு சொல்லுங்கள். படம் வந்த பின்னால் படத்தை பற்றி பார்ப்போம் நான் எப்போதுமே சில படங்களுக்கு படத்தின் முடிவை தெரிந்து கொண்டுதான் படம் பார்க்க செல்வேன். படம் நல்லா இருந்தால் அந்தப் படம் யார் நடித்திருந்தாலும் படத்தை பார்ப்பதில் தவறில்லை. வாசித்த நண்பர்களுக்கு நன்றிகள்.....
பேசு --- இசை அலசல்
11:47 pm |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment