Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

தீவிரவாதி (தமிழ் படம் ) --- விமர்சனம்


சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படம் பல பட விழாக்களில் பல விருதுகளை பெற்றும், இரண்டு விழாக்களில் இந்தப் படம் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டும் உள்ளது அந்த அளவுக்கு நல்ல வரவேற்ப்பை உலகளவில் பெற்றது என்பதை யாராலும் பொய் என்று வாய் தவறிக் கூட சொல்ல மாட்டார்கள் என்பதுதான் உண்மை. ஏனெனில் இது ஒரு தீவீரவாதத்தை பற்றிய ஒரு படமாகும்.

இந்தப் படத்தில் ஒரு பத்தொன்பது வயது இளம் பெண் ஒரு அதிபரை கொள்வதற்காக தீவீரவாத இனத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்டு அனூப்பப்படுகிறாள். அவள் தீவிரவாதி என்று மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்க படத்தில் காட்சிபடுத்தப்பட்ட விதம் அருமையாக உள்ளது.
இந்தப் படத்தில் தீவிரவாத இளம் பெண்ணாக வரும் மல்லி என்ற கதாபாத்திரம் அருமையாக தன பணியை, ஒரு தீவிரவாதப் பெண் எவ்வாறு அமைதியாக மற்றும் எந்த இடத்தில பேச வேண்டுமோ அங்கே மட்டும் தான் பேசுவாள் மிக நன்று. படத்தை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால்தான் படம் புரியும் இல்லையெனில் படம் புரியாது, இது உண்மை என்று நீங்கள் படம் பார்க்கும் போது உணர்ந்துகொள்ள்வீர்கள். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பார்க்க வேண்டிய படமாகும். இந்தப் படம் வெளிவந்த வருடம் 1998 ஆம் ஆண்டு ஆகும். அப்போதே நம்முடைய தமிழ் சினிமா எந்தளவுக்கு எத்தனை விருதுகளை உலகளவில் பெற்றிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள ஒரு சூழலில் ஏன் இவ்வாறான ஒரு செயல்கள் நம் தமிழ் சினிமாவில் நடை பெறுவது இல்லை. இதை வருங்காலத்தில் படம் இயக்கப் போகும் ஒவ்வொரு உதவி இயக்குனரும் புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

படம் பெற்ற மற்றும் பரிந்துறைக்கப்பட்ட விருதுகளின் வரிசை உங்களுக்காக ...

வெற்றிபெற்றவை:
1999 - Cinemanila International Film Festival - Grand Jury Prize - Santosh Sivan
1999 - Cinemanila International Film Festival - Lino Brocka Award for Best film
-
Santosh Sivan
2000 - Ale Kino International Young Audience Film Festival - Poznan Goat for
Best
Director - Santosh Sivan
2000 - Sarajevo Film Festival - Panorama Jury Prize for Honorable Mention -
Santosh Sivan

பரிந்துரைக்கப்பட்டவை:

2001 - Chlotrudis Award - Best Actress - Ayesha Dharker
2001 - Phoenix Film Critics Society Award for Best Foreign Language Film

சந்தோஷ் சிவன் இப்போது உறுமி என்ற படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி முடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். விரைவில் அந்த படம் திரைக்கு வந்து வெற்றியடைய படக் குழுவினருக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம். இவருடன் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் அது எனது பாக்கியமாக கருதுவேன்....... வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers