Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

தன் தாய் தந்தையரை தேடி ஒரு பயணம்--- விமர்சனம்




Waiting for the Clouds என்ற இந்தப் படம் எசிம் வுச்டாக்லு என்பவர் இயக்கி 2003 ஆம் ஆண்டு வெளி வந்து ஒரு நல்ல படம் என்று உலகத்தில் உள்ள அணைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் இந்தப் படம் பல சர்வதேச பட விழாக்களில் போட்டியிட்டு விருதுகளையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வயதான பெண் தன் தாய் தந்தையரை தேடிச் செல்லும் ஒரு பயணம் தான் படத்தின் கருவாகும்.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஒரு குடும்பம் பனி குளிரைத் தாங்கமுடியாமல் பிழைப்புக்காக வேறிடம் தேடி செல்கிறது. படத்தின் ஆரம்ப காட்சியே மனதை உலக்குவது போல் உள்ளதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். இவ்வாறு செல்லும் அந்தப் பயணத்தின் இடையில் தனது தாய் தந்தையை இழந்து தானும் தன் தம்பியும் ஒரு காட்டுப்பகுதியில் தவித்துக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது வேறொரு குடும்பம். அவள் தம்பியை ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட்டு அந்த பெண்ணை மட்டும் தன்னுடன் அழைத்துச்செல்கிறார்கள். அவள் வளர்த்து பெரியவளாகி சந்தோசமாய் வாழ்ந்து கொடிருக்கும் போது தன் பிறந்தது இந்த ஊரே இல்லை என்று தெரிய வருகிறது.
தான் வளரும் போது பக்கத்து வீட்டில் உறுதுணையாக இருத்த சின்னப் பையன் மற்றும் தன்னை வளர்த்த தாய் தந்தை என்று எல்லாரையும் விட்டு விட்டு எப்படி எங்கே போய் நான் என் சொந்த தாய்மொழியை தேடுவேன், அப்படி தேடினாலும் அங்கே யார் எனக்காக காத்திருப்பார்கள். இப்படியெல்லாம் தனக்குள்ளே கேள்வி கேட்டுக் கொண்டு திணறுகிறாள்.
ஒரு நல்ல விஷத்தை அடைக்கலம் கொடுத்தவர்கள் செய்திருக்கிறார்கள். அது, தான் தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கு தான் பிறந்தது மற்றும் பேசும் மொழி என எல்லாவற்றையும் மாற்றி பாசத்துடன் வளர்த்தது. இப்படி ஒவ்வொரு குடும்பமும் ஓரிரு அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்தால் போதும் நம் நாட்டில் யாருமே அனாதையாக இருக்கமாட்டார்கள் என்றும் பிச்சைகாரர்கள் இல்லாத இந்திய என்றும் ஒரு முன்னேற்றத்தை காணலாம்.
பெண் தனது பிறந்த ஊரை தேடி பயணத்தை தொடங்குகிறாள், அந்தப் பயணம் வெற்றி அடைந்தத இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். படத்தில் நடித்திருக்கும் ஐஸி எனற பெண் சிறு வயது முதல் பெரியவள் வரை மிக நன்றாக நடித்திருக்கிறாள். படத்தை இயக்கியவர் ஒரு இளம் பெண் இயக்குனர். படத்தில் கலைப் பதிவை மிக அருமையாக செய்திருக்கிறார் இயக்குனர். படித்த வாசகர்களுக்கு நன்றிகள்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment

Search This Blog

vks. Powered by Blogger.

Followers