ஒரு பெரிய மலைப்பாறைப்பகுதியில் செல்லும் போது எந்தவுக்கு பயம் ஒருவனை விரட்டுமோ அந்தவுக்கு இந்தப் படத்தை பார்க்கும் போது பயத்தை உண்டு பண்ணியது என்பதுதான் உண்மை. என்னடா மலைப்பாறை பகுதியை பற்றியெல்லாம் பேசறான் என்று நினைப்பீர்கள், அத்துடன் தொடர்புடைய ஒரு மிகப் பிரம்மாண்டமான திரில்லர் படம் இது. படத்தை அலெக்ஸ்சான்றா அஜா என்பவர் இயக்கி 2006 ஆம் ஆண்டில் வெளிவந்து கவனிக்கப்பட்ட படங்களில் ஒரு படமாக இதுவும் இருந்தது என்று சொல்வதில் ஒரு தவறும் இருக்காது.
படத்தை பற்றி..................
ஒரு குடும்பம் மெக்ஸிகோ பாலைவனத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது, அப்போது இடையில் காஸ் நிரப்பும் இடத்தில உள்ள ஒருவன் சொல்லும் குறுக்குவழியில் செல்கிறார்கள். அந்த வழியில் பயணம் நான்றாக உள்ளது அவர்களுக்கு, அந்த வழியின் நடுவில் சில மர்ம மனிதர்களால் அவர்களுடைய காரின் அணைத்து டயர்களும் பஞ்சர்ராகப்படுகிறது. அந்த மனிதர்கள் யாரெனில் ரத்தம் குடிக்கும் ரத்தக் காட்டேறிகள். அவர்கள் மனிதர்களின் ரத்தத்தை மட்டும் அல்ல எல்லாவிதமான விலங்குகளின் ரத்தத்தையும் குடிக்கக் கூடிய சைக்கோ மனிதர்கள் ஆவார்கள், இன்னும் இந்த உலகத்தில் இப்படிப்பட்ட சைக்கோக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனாலும் இதை என்னால் நம்ப முடியவில்லை அப்படிப்பட்ட இடங்களுக்கு போய் தான் பார்த்துவிட்டு வரவேண்டுமோ எனாவோ.....
இவ்வாறு அவர்கள் அந்த இடத்தில தங்கியிருக்கும் போது சில பல அல்லல்களுக்கு ஆளாகிறார்கள். அதில் ஒரு நாய் நான்றாக தனது முதலாளிகளை முடிந்தளவு காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. அந்தவுக்கு பயிற்சி குடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள் அந்த ஐந்தறிவு பிராணிக்கு. ஆனால் சில விசங்களை மட்டும் தான் உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். முழுவதுமாக சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது ஒரு த்ரில்லான அனுபவத்தை உங்களால் உணர முடியாது. படத்தில் அதிகளவு செலவில்லாமல் முடிந்தளவு கலை பதிவை நேர்த்தியாக மிகவும் நன்றாக செய்திருக்கிறார். இந்தப் படம் பார்க்கும் போது அவர்களது ஒரு தன்னாட்டுப் படைப்பை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது என்பதுதான் உண்மை.
படத்தில் தேர்வு செய்யப்பட்டு காட்சி படுத்தப்பட்ட இடங்கள் ஓரிரு இடங்கள் என்றாலும் அவற்றை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தில் நடித்த அணைத்து கதாபாதிரங்களுமே அவரவர் பணியை நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தை அனைவரும் கண்டிப்பாக பாருங்கள், பார்த்துவிட்டு எனது பதிவிற்கு தகுந்த பதிலை சொல்லுங்கள் நன்றி
மலைப்பாறைகளுக்கும் கண்கள் --- விமர்சனம்
9:23 am |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment