Pages

சினிமாவை நேசிப்பவன் ஒருபோதும் தோற்கமாட்டான்

My Photo
vks
chennai, TN, India
I Am A Very Cool Person
View my complete profile
RSS

தீவிரவாதி (தமிழ் படம் ) --- விமர்சனம்


சந்தோஷ் சிவன் இயக்கிய இந்தப் படம் பல பட விழாக்களில் பல விருதுகளை பெற்றும், இரண்டு விழாக்களில் இந்தப் படம் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டும் உள்ளது அந்த அளவுக்கு நல்ல வரவேற்ப்பை உலகளவில் பெற்றது என்பதை யாராலும் பொய் என்று வாய் தவறிக் கூட சொல்ல மாட்டார்கள் என்பதுதான் உண்மை. ஏனெனில் இது ஒரு தீவீரவாதத்தை பற்றிய ஒரு படமாகும்.

இந்தப் படத்தில் ஒரு பத்தொன்பது வயது இளம் பெண் ஒரு அதிபரை கொள்வதற்காக தீவீரவாத இனத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்டு அனூப்பப்படுகிறாள். அவள் தீவிரவாதி என்று மற்றவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்க படத்தில் காட்சிபடுத்தப்பட்ட விதம் அருமையாக உள்ளது.
இந்தப் படத்தில் தீவிரவாத இளம் பெண்ணாக வரும் மல்லி என்ற கதாபாத்திரம் அருமையாக தன பணியை, ஒரு தீவிரவாதப் பெண் எவ்வாறு அமைதியாக மற்றும் எந்த இடத்தில பேச வேண்டுமோ அங்கே மட்டும் தான் பேசுவாள் மிக நன்று. படத்தை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால்தான் படம் புரியும் இல்லையெனில் படம் புரியாது, இது உண்மை என்று நீங்கள் படம் பார்க்கும் போது உணர்ந்துகொள்ள்வீர்கள். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பார்க்க வேண்டிய படமாகும். இந்தப் படம் வெளிவந்த வருடம் 1998 ஆம் ஆண்டு ஆகும். அப்போதே நம்முடைய தமிழ் சினிமா எந்தளவுக்கு எத்தனை விருதுகளை உலகளவில் பெற்றிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள ஒரு சூழலில் ஏன் இவ்வாறான ஒரு செயல்கள் நம் தமிழ் சினிமாவில் நடை பெறுவது இல்லை. இதை வருங்காலத்தில் படம் இயக்கப் போகும் ஒவ்வொரு உதவி இயக்குனரும் புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

படம் பெற்ற மற்றும் பரிந்துறைக்கப்பட்ட விருதுகளின் வரிசை உங்களுக்காக ...

வெற்றிபெற்றவை:
1999 - Cinemanila International Film Festival - Grand Jury Prize - Santosh Sivan
1999 - Cinemanila International Film Festival - Lino Brocka Award for Best film
-
Santosh Sivan
2000 - Ale Kino International Young Audience Film Festival - Poznan Goat for
Best
Director - Santosh Sivan
2000 - Sarajevo Film Festival - Panorama Jury Prize for Honorable Mention -
Santosh Sivan

பரிந்துரைக்கப்பட்டவை:

2001 - Chlotrudis Award - Best Actress - Ayesha Dharker
2001 - Phoenix Film Critics Society Award for Best Foreign Language Film

சந்தோஷ் சிவன் இப்போது உறுமி என்ற படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி முடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். விரைவில் அந்த படம் திரைக்கு வந்து வெற்றியடைய படக் குழுவினருக்கு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம். இவருடன் உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் அது எனது பாக்கியமாக கருதுவேன்....... வாசித்த அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குள்ளநரிக் கூட்டம் --- விமர்சனம்

இயக்குனர் சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீ பாலாஜி என்பவர்தான் இந்தப் படத்தை இயக்கியவர். நான் முன்னாடியே இந்தப் படத்தின் பாடல்கள் பற்றி அலசும் போது நான் ஒரு விஷத்தை சொல்லி இருந்தேன் அதற்க்கு என்னை முதலில் நீங்கள் மன்னித்து விடுங்கள்.(அது குள்ளநரிகள் திட்டம் தீட்டினால் அது வெற்றி தான் என்று நான் சொல்லியிருப்பேன் அதற்காகத்தான் இந்த மன்னிப்பு). படத்தின் முதல் பாதியில் மட்டும் ஹீரோயினை நடிக்க வைத்திருக்கிறார்கள். இராண்டாம் பாதியில் ஹீரோயினை பார்க்கவே முடியவில்லை. இன்னமும் இந்த இயக்குனர் தமிழ் சினிமாவின் தொடர் பார்முலாவை விட்டு வெளியே வரவில்லை என்று தான் நான் நினைக்கிறேன். ஆனால் என்னால் நம்பமுடியவில்லை ஏனெனில் இந்த இயக்குனர் படத்துக்கு படம் ஏதாவது பண்ண வேண்டும் என்று நினைக்கக் கூடிய சுசிந்தரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியது என்பதை ....... நான் பார்த்த நிறைய படங்களில், போலீஸ் தப்பு பண்ணினால் தான் அந்தப் படம் நல்ல வருமா என்ன... அதை ஒரு கருவாக எடுத்துக் கொண்டு, ஏன் மக்களின் மனதில் போலிசை பற்றி ஒரு தவறான என்னத்தை உண்டுபண்ணுகிறார்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தயவு செய்து வருகால இயக்குனர்களே இதை மாற்றிக் காட்டுங்கள். படத்தில் விழிகளிலே என்ற பாடல் இனிமையாக உள்ளது மற்றும் குள்ளநரிக் கூட்டம் என்ற பாடல் ஓகே என்றுதான் சொல்லமுடியும். இந்த விமர்சனத்தை படித்து விட்டும் நீங்கள் படம் பார்பீர்களானால் அது நீங்கள் சினிமா மீது வைத்திருக்கும் ஒரு மரியாதையைத்தான் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிரின்சஸ் அரோரா --- விமர்சனம்

பிரின்சஸ் அரோரா என்ற இந்தப் பெயருக்கு " ஒரு அழகான தேவதையின் தூக்கநிலை " எனற ஒரு அற்ப்புதமான நல்ல பொருள் விரிவை தரக்கூடிய ஒன்றாகும். இந்தப் தலைப்பிற்கு தகுந்தாற்போல் இந்தப் படமும் ஒரு நல்ல இடத்தை, தாய்மார்களின் மனதில் சில தவறுகளுக்கு அவர்கள் என்ன நினைப்பார்களோஅதைத் தான் இந்தப் படம் செய்திருக்கிறது என்றும் படத்தின் இயக்குனர் செய்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.
இந்தப் படம் குழந்தைகளுக்கான குறிப்பாக பெண் குழந்தைகள் எப்படியெல்லாம் அவதிக்குள்ளாகிறார்கள் என்பதை சொல்லும் படம் என்று சொல்வதை விட ஒரு ஆறுவயதுக் பெண் குழந்தை பள்ளி முடிந்தவுடன் தன் தாய் வந்து தன்னை விட்டிற்கு அழைத்துச் செல்வாள் என்று காத்திருக்கிறாள். வெகுநேரம் ஆகியும் தன் தாய் வராததால் அந்தக் குழந்தை தானாகவே ஒரு கால்டாக்ஸ்சியை பிடித்து விட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறாள். அபோதான் அவள் தன்னிடம் உள்ள பணத்தை எடுத்துப் பார்க்கும் போது கொஞ்சம் குறைவாக உள்ளது(வண்டி வாடகைக்கு ). அதை அந்தக் குழந்தை அந்த வண்டியின் ஓட்டுனரிடம் கூறும்போது அவர் என்ன செய்திருக்க வேண்டும் ( ஒரு குழந்தை அல்லவா அவள், அவளை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார் ஒவ்வொரு குழந்தையையும் தன் குழந்தையைப் போல பாதுகாக்கவேண்டும் அல்லவா ? ஓட்டுனர் அவ்வாறு செய்யாததால் அந்தப் குழந்தை சில கயவர்களின் கையில் சிக்கி கற்பழிக்கப்பட்டு நிவானமாக்கப்பட்டு கொலை செய்து குப்பையில் எரிந்து விடுகிறார்கள் ) அந்த ஓட்டுனர் அந்தக் குழந்தையை தன் குழந்தை போல பாவித்து வீடு வரை கொண்டுசேர்த்து அவள் தாயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்ல. இதே அவருடைய குழந்தையாக இருதால் இவ்வாறு செய்திருப்பாரா என்ற கேள்வியை இங்கே நான் கேட்டால் தான் எல்லாரும் யோசித்துப் பார்ப்பார்கள்.
இவ்வாறு தான் குழந்தை நிவானமாக்கப்பட்டு கொள்ளப்பட்டு குப்பையில் எரிந்தததை பார்த்த அவளின் தாய் அவர்களை பழிவாங்க வேண்டுமென்று நினைக்கிறாள், இதுதான் ஒவ்வொரு தாயின் ஒரு ஆதங்க ஆசையாகும் ஆனால் எத்தனை தாய்மார்கள் உண்மையாக இந்த ஆதங்க ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதை கைவிட்டு எண்ணிவிடலாம் என்பதுதான் உண்மை. ஆதலால் இந்தப் படத்தில் அந்தக் குழந்தையின் தாய் செய்ததை எந்தெந்த தாய் செய்கிறாளோ அவர்களுக்கெல்லாம் எல்லாவிதமான மக்களும் ஆதரவு அளிக்கவேண்டும் என்பதுதான் இளைய சமுதாயத்தின் கோரிக்கை ஆகும் .
படத்தின் காட்சியமைப்புகள் மற்றும் கதை சொல்லும் விதம் மிக மிக நன்றாக உள்ளது. இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். எனவே தமிழ் சினிமாவிலும் இப்படிப்பட்ட படங்கள் உருவாகும் நிலை வெகு தூரத்தில் இல்லை. அப்படிப்பட்ட படங்கள் வரும் போது அதைமக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இயக்குனர் மற்றும் உதவிஇயக்குனர்களின் ஆசையும் அன்பான கோரிக்கையும் ஆகும்.
படத்தை அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்......... விமர்சனங்களை சொல்லுங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழக அச்சுக் கலையின் ஆரம்பம் எப்போது ...


ஹென்றிக் என்ரி கியூஸ் எனற ஒரு பாதிரியாரால் 1578 -இல் நெல்லை மாவட்டத்தில் புன்னைக் காயல் என்ற இடத்தில தொடங்கப்பட்ட அச்சகம் தான் முதல் தமிழ் அச்சகம் ஆகும்.எனவே இந்த ஹென்றி என்பவர்தான் தமிழ் அச்சுக்கலையின் தந்தை என்று போற்றப்படுகிறார். இவர் தனது இருபத்து ஒன்பதாவது வயதில் தூத்துக்குடிக்கு வந்தவர் தமிழ் கற்று குருக்கள் மடம் நடத்தினார். பக்தர்களுக்கு தமிழிலேயே பாவ மன்னிப்பு வழங்கிய முதல் பாதிரியார் இவர்தான். நெல்லை மாவட்டத்தில் கிறிஸ்துவ மதத்துக்கு ஒரு இடத்தை பெறச்செய்த சவேரியாரின் நெருங்கிய நண்பராகவும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹென்றி என்பவர், அனைவரும் பிரச்சாரத்துக்கு தமிழ்நூல்களை தான் பயபடுத்தவேண்டும் என்று சவேரியார் முதற்கொண்டு அனவைவருக்கும் அன்புக் கட்டளையாக கூறினார் என்பது உண்மை ஆகும். "தம்பிரான் வணக்கம் " என்ற சவேரியாரின் நூலை மொழி பெயர்த்தவர் ஹென்றி என்பவரே...இவருடன் சேர்ந்து ஜோ .டி. பாரியா மற்றும் கொன்சால்வசு என்ற பாதிரியார்களும் பணி புரிந்தனர்.இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள். குறிப்பாக ஜோ . டி.பாரியா என்பவர் தமிழ் எழுத்துக்குகளை அதிகமாக செதுக்கினார். 1578 ல் "ஞானோபதேசம்" என்ற நூல் அச்சிடப்பட்டது. அடுத்து 1579 ல் இரண்டு நூல்கள் வெளியாயின அவை மீண்டும் "தம்பிரான் வணக்கம் " மற்றும் "பாவ சங்கீர்த்தனம் " இவை இரண்டும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் உள்ள போட்லியன் நூலகத்தில் உள்ளது.இநத நூல்களை எல்லாம் எழுதியவர் ஹென்றிக் என்பவர்தான். தமிழக அச்சுக் கலையின் தந்தையான இவர் தனது என்பதாவது வயதில் மரணமடைந்தார். அவரது விருப்பப்படி தூத்துக்குடியில் உள்ள பணிமாத ஆலயத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. .....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குஜராத் --- சிங்கப்பூருடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்


















குஜராத் மாநிலத்தை உலகத்தோடு ஒப்பிட்டு ஒரு ஆய்வறிக்கையை
International council என்ற ஒரு நிறுவனம் அனைவரும் கவனிக்கக்கூடிய அளவிற்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ........ குஜராத் மாநில அரசு உலகிலேயே இரண்டாவது நல்ல மாநிலஅரசாக உள்ளது எனற செய்தியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது... இதை தயவுசெய்து மற்ற மாநில அரசுகளுக்கு தெரியபடுத்த வேண்டியது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். எனவே மற்ற மாநிலஅரசுகள் தயவு செய்து மக்களுக்கு சலுகைகளை குடுத்து ஏமாற்றுவதை விட்டுவிட்டு குஜராத் மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என்பது மக்களின் நாயமான ஒரு கோரிக்கை ஆகும்.

அப்படி என்னதான் குஜராத் மாநில அரசு செய்து விட்டது அதற்க்கு International council இரண்டாவது இடத்தை கொடுத்துவிட்டது என்று எல்லாரும் நினைக்கலாம். எதனால் எனில் குஜராத் மாநில அரசு கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் உலக வங்கியில் 50,000 கோடி ருபாய் கடனில் இருந்தது. ஆனால்அந்த மாநிலத்தின் முதல்வர்கள் யாராறேன்று எனக்கு தெரியாது ஆனால்அவர்கள் எவ்வாறு செயல்பட்டு இப்போது அந்த அரசை உலக வங்கியில் ஒரு லட்சம் கோடி இருப்புத்தொகையாக வைத்திருக்கும் அளவுக்கு அந்த அரசு முன்னேறியிருக்கிறது... வாழ்த்துக்குகள் அந்த அரசுக்கு மற்றும் இந்தியாவிற்கு முன்னோடியாக இருப்பதற்கு ........
குஜராத் மாநில அரசின் திட்டங்கள் ...
மதுக்கடைகள் இல்லாதது
மின்சாரம் தடை இல்லை
யாருக்கும் எந்த சலுகைகளும் கிடையாது
பெண்கள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி முறை
இப்படியே குஜராத் மாநில அரசு செயல்பட்டு வருமேயானால் இன்னும் பத்துவருடங்களில் ஒரு நல்ல மாநில அரசாக மற்ற மாநில அரசுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு மினி சிங்கப்பூரை நம் இந்தியாவிலும் பார்க்கலாம் ...............
எனவே மற்ற இந்தியாவிலுள்ள மாநில அரசுகளின் நிலைமை ?????????????????
நீங்கள் தான் சொல்லவேண்டும் ,,,, எனவே வாக்களிக்கும் போது ஒரு நல்ல முதல்வரை தயவுசெய்து தேர்ந்தெடுங்கள் இந்தியக் குடிமகன்களே .................. இன்னும் இருபது வருடங்களில்இந்தியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் உலகிற்கே ஒரு முன்னோடிநாடாக மாற்றி காட்ட வேண்டும் என்பது நம் அனைவரின் கடமையாகும்.
மாற்ற முயசிப்போம் மாற்றி காட்டுவோம் ....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Search This Blog

vks. Powered by Blogger.

Followers