சிநேகிதன் கடலாகுதலின் சூத்திரம்
திறந்தே கிடக்கிறது பிரபஞ்சா
முத்த உதடுகளும்
கொஞ்ச மாம்சமும்
இலஞ்ச்சிவப்பு உதட்டுச்சாயம் படிந்த
நிரம்பாத புனித கோப்பைகளும்
பெரு நதிக்குள் இருக்கும் கதவுகள்
கடல்களுக்கு அழைத்துச் செல்கிறது
சுற்றிலும் கடலே இருக்கிறது
கடலை சுற்றிலும் நானே இருக்கிறேன்
சுவாசங்கள் நீராலாகின்றன
பெரு மூச்சுகள் முத்துச் சிற்பிகளாகின்றன
முத்த உதடுகள் கடல் குடிக்கிறன
கொஞ்ச மாமசத்தை பேரன்பு தின்கிறது
பானங்களில் கரைகிறது புனிதக் கோப்பைகள்
கடலுக்கும் எனக்கும் உதடுகளில்லை
அன்பின் நீர்மம் நேர்நிர்ப்பவைகளை குடித்தலைகிறது
மதுச்சுரப்பிகளில் வாய் பதித்திருக்கும்
தீராக் குடிகாரனாகி
கலங்கள் உடைகிறது
சிவந்த மது நூறு கால்களால்
கடல் மேல் ஓடிக்கொண்டிருக்கிறது
போதையின் உச்சிகளில்
மௌனங்கள் மலர்கின்ற காலைகளில்
நிதம்ப நதியின் கரையோரம்
இந்திரிய வூற்றின் அருகில்
ஞானம் பெற்றோம்
நாணி மலர்ந்தது ஒளி வட்டம் .......
நான் படித்த கவிதை எனக்கு மிகவும் பிடித்தது
10:03 am |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment