இந்தப் படத்தை பார்க்கும் போது எனக்கு தோன்றிய சில கசப்பான அனுபவங்கள்என்று சொல்வதை விட நம் நாட்டில் தலைமுறை தலைமுறைகளாய் நடந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் மனதில் தோன்றுகிறது .. அவை பணக்காரர்கள்செய்யும் வெட்டி பந்தாவால் அதற்கு கிழே உள்ளவர்களை தப்பு செய்யதூண்டுகிறது என என் மனதில் தோன்றுகிறது ......
படத்தை பற்றி .....
இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு கடத்தல் பற்றிய படம் ..இருநண்பர்கள் ஒரு திட்டம் போட்டு ஒரு பணக்காரப் பெண்ணை கடத்துகிறார்கள் ..இதில் இந்தக் கரு ஒரு சாதாரண விசயமாக இருந்தாலும் அதனுடைய காட்சிஅமைப்புகள் அதாவது எப்படி கடத்தப்படுகிறது மற்றும் கடத்திய பின் எவ்வாறுஅதை அவளுடைய வீட்டிற்கு தெரிய படுத்துகிறார்கள் என்பது முதற்கொண்டுகாட்சி படுத்தப்பட்டிருக்கும் விதம் புதிதாய் தெரிகிறது ...
அந்தப் பெண் ஒரு இருட்டறையில் அடைக்கப்படுகிறாள் ,அவளுக்குதேவையான அனைத்தும் வழங்கப்படுகிறது ,கை கால்கள் கட்டப்பட்டிருக்கிறதுவாய் மூடப்பட்டிருக்கிறது முகம் துணியால் முடப்பட்டிருக்கிருக்கிறது இருவரும் உள்ளே வரும் போது முகத்தைமூடிகொள்கிறார்கள்..இவையெல்லாம் எதற்க்கென்று படம் பார்க்கும் போதுநீங்கள் புரிந்து கொள்வீர்கள் ...இப்படியே படம் படு சுவாரஸ்யமாகபோய்க்கொண்டிருகிறது ...
அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தார் பணம் கொடுக்க முன்வருகின்றனர்எனினும் இவர்கள் மூவரையும் தவிர வேறு யாரையும் காட்சிகளிலோ அல்லதுமறைமுகமாகவோ காட்டப்படுவது இல்லை .இப்படத்தின் இடையில் சில காதல்பயண காட்சிகள் முக்கிய புள்ளியாக உள்ளது. நிறைவுப்பகுதியை சொல்லும்காட்சியும் அதுதான் ......
இயக்குனரை பாராட்டவேண்டிய விஷயங்கள் ...
தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்கள் குறிப்பாக ஹீரோயின் ....அடுத்து அதிக கதாப்பாத்திரங்கள் இல்லாதது .....
0 comments:
Post a Comment