இந்தப் படத்தில் இயக்குனரை பாராட்ட வேண்டிய விஷயங்களை முதலில் இங்கே நான் சொல்லி விடுகிறேன் ...
படத்தில் லவ் சம்மந்தப்பட்ட காட்சிகள் வைக்காதது......
பாடல்கள் இல்லாதது ... ஆடியன்சுக்காக ஒரே ஒரு பாடல் ....
படத்தின் ஒளிப்பதிவு நன்று ....
பின்னணி இசையும் நன்று ...
படத்தைப் பற்றி ....
இந்த படத்தின் இயக்குனருக்கு ஒரே ஒரு வேண்டுகோள் ..அது இனிமேல் தயவுசெய்து கால் ஷாட்டை மட்டும் காட்டாதீர்கள் என்பது என்னுடைய வேண்டுகோள் மட்டும் இல்லை உங்களுடைய படங்களை விரும்பி பார்க்கிற ரசிகர்களின் வேண்டுகோள் ஆகும்....இந்தப் படமும் உங்களுடைய அஞ்சாதே படத்தில் உள்ள கருவும் ஒன்றாக உள்ளது அது ஏன் என்று தெரியவில்லை இரண்டிற்கும் ஒன்றிரண்டு வித்தியாசங்கள்தான் அவை ...
அஞ்சாதேளையும் பெண்கள் தான் கடத்தப்பட்டு கற்பழிக்கப் படுகிறாள் அதில் கடத்தி அந்தப் பெண்ணின் அப்பாவிடம் பணம் கேட்கிறார்கள் ..
யுத்தம் செய்ளையும்பெண்கள் தான் கடத்தப் பட்டு கற்பழிக்கப் படுகிறாள் ..இதில் சிபிஐ
விசாரிக்கிறார்கள் அதில் போலீஸ் விசாரிக்கிறார்கள் ...
இரண்டிற்கும் ஒரே ஒரு வேறுபாடு தான் அது வில்லன்கள் ஆகும் ...
இந்தப் படத்தில் காலம் காலமாக சொல்லி வரும் கதையையே இவரும் சொல்லி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அவை என்னவெனில் நமது தமிழ் சினிமாவில் ஒருவர் போலீஸ் ஆக இருந்து கொண்டு தவறு செய்வதைத் தான் இந்தப் படத்திலும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ... அதனால் இப்படிப்பட்ட வில்லனுக்கும் ஒரு கமர்சியல் படத்தில் வரும் வில்லனுக்கும் என்ன வித்யாசம் என்று சொல்ல முடியவில்லை ... இந்த மாதிரியான ஒரு தவறைத்தான் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள் ...படத்தின் சில இடங்களில் நீங்கள் சொல்ல வந்த விஷயம் உங்கள் ரசிகர்களுக்கு புளியவில்லை என்று நான் நினைக்கிறேன்இதைத் தான் நானும் படம் பார்த்து விட்டு வரும் போது சில நண்பர்கள் சொன்னார்கள் அவர்கள் உங்களுடைய ரசிகர்கள் ஆவார்கள் .....
இந்த இயக்குனர் ஈசன் படம் பார்த்தார இல்லையா என்று எனக்கு தெரியாது ஈசன் படத்தை பார்த்தவர்கள் நான் சொல்லும் விஷத்தை புரிந்து கொள்வார்கள் அது ஈசன் படத்திலும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவன்தான் பழிவாங்குகிறான் ..
இதிலும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பழிவாங்குகிறார்கள் ...
இரண்டுக்கும் என்ன வித்தியாசம் நீங்கள் தான் சொல்ல வேண்டும் ... ஈசன் படம் சரியாக போகாததால் யாருக்கும் தெரியாது என்று நினைத்தாரோ என்னவோ இயக்குனர் ...
யுத்தம் செய் --- சில இடங்களில் யுத்தம் செய்ய வில்லை
யுத்தம் செய் -- விமர்சனம்
9:23 am |
Subscribe to:
Post Comments (Atom)
Search This Blog
vks. Powered by Blogger.
0 comments:
Post a Comment